பக்கம்:சாவி-85.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எண்ணியதற்கு நேர் மாறாக நடந்து விட்டது. படத்தைக் காட்டியதும் மகா கோபம் வந்து விட்டது வாசனுக்கு. “முதல்ல. இதை நீ வெளியில் எடுத்துக் கொண்டு போ...' என்றார் கண்டிப்பான குரலில். நான் சங்கடப்பட்டுப் போனேன். 'படத்தை இங்கே மாட்டி வைக்கச் சொல்கிறாயா? அதற்குத்தானே கொண்டு வந்திருக்கிறாய்? என் வீட்டுக்கு வருகிறவர்கள் இந்தப் போட்டோவைப் பார்த்து விட்டு ஒகோ மகாராஜாவும் வாசனும் ரொம்ப நாள் சிநேகிதர்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டுமா? அந்தப் போலியான கெளரவம் எனக்குத் தேவை இல்லை. ஏதோ நீ கேட்டுக் கொண்டதற்காக உன் சங்கடத்தைப் புரிந்து கொண்டு நான் சற்று நேரம் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அந்த விஷயம் அதோடு முடிந்தது. வேண்டுமானால் இதைக் கொண்டு போய் உன் வீட்டில் மாட்டிக் கொள்' என்று கூறி என்னைப் படத்தோடு திருப்பி அனுப்பி விட்டார்.” 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/159&oldid=824466" இலிருந்து மீள்விக்கப்பட்டது