பக்கம்:சாவி-85.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. நடுக்கடலில் ஒரு பயணம் விகடனில் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என்பதில் சாவி எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார். பளிச்சென்று ஏதேனும் ஐடியா தோன்றினால் உடனே அதை பொறுப்பாசிரியர் பாலு அவர்களிடம் சொல்லி அதை எழுதலாமா என்று கேட்டு அனுமதி பெறுவார். இங்கே போயிருக்கிறீர்களா? என்று வாரா வாரம் சாவி எழுதிய கட்டுரைகள் அந்தப் புதுமைகளில் ஒன்று. நம்மில் பலபேர் சில இடங்களுக்குப் போயிருப்போம். அப்படிப் போன இடங்களில் பார்த்ததையும் கேட்டதையும் ரசித்திருப்போம். ஆனால் சாவி அங்கே போய் வந்து எழுதியதைப் படித்த பிறகுதான் அட, நாம் பார்த்த இடத்தில் இவ்வளவு இருக்கிறதா?’ என்று வியப்போம். ஓர் இடத்தைப் பார்க்கையில் நாம் கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும்தான் நம்முள் பதியும். ஆனால் தான் போய்ப் பார்த்த இடங்களை சாவி அவர்கள் சுவாசத்தாலும் உணர்ந்து நாம் அதை நேரில் காண்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும் அளவுக்குத் தம் எழுத்துத் திறமையைப் பயன்படுத்தினார். பலாப்பழம் விற்பதை அவர் எழுதினால் படிப்பவர்களின் மூக்கில் பலாப்பழ வாசனை வீசும்! கண், காது, மூக்கு மூன்றாலும் தாம் அனுபவித்த, ரசித்த, கேட்டு மகிழ்ந்த இடங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட சாவியின் இங்கே போயிருக்கிறீர்களா? என்ற முக்கோணப் பார்வைக் கட்டுரைகள் தமிழுக்கு ஒரு புதுமை என்றே சொல்ல 150

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/160&oldid=824471" இலிருந்து மீள்விக்கப்பட்டது