பக்கம்:சாவி-85.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் யாருக்கும் வீட்டுக்குத் திரும்ப மனமில்லை. நேராக எண்ணுரர் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்த பயணிகள் விடுதி ஒன்றில் சற்று நேரம் ஓய்வெடுத்தோம். துக்கம் கலைந்து எழுந்தபோது மணி நாலு. திரு. பாலு அவர்கள் தயாரித்துத் தந்த காப்பியை சுடச்சுட சாப்பிட்ட பிறகே அனைவரும் பழைய நிலைக்குத் திரும்பினர். அடுத்து 'எடிட்டோரியல் டிஸ்கவுன் ஆரம்பமாயிற்று. விகடன் ஆசிரியர் குழுவுக்கு 'அடுத்த வ்ாரம் என்ன?" என்பது எப்போதும் ஒரு ஆதார சுருதியாக உள்ளத்தில் இருந்து கொண்டிருக்கும். அங்கே மணலில் சற்று கிழிந்து போன ஒரு கடிதம் யார் கண்ணிலோ பட்டது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு காதல் கடிதம். மணியன் அதை சிரமப்பட்டு உரக்கப் படித்தார். அவர் படித்தபோது கிழிந்து போன பகுதிகளை மற்றவர்கள் தங்கள் கற்பனையில் பூர்த்தி செய்து கொண்டனர். இதையே கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதினால் என்ன?’ என்று ஒரு யோசனை எழுந்தது. அவ்வளவுதான்! அத்தனை பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒன்று சொல்ல ஒரு முழுக்கதையே உருவாகிவிட்டது. இப்படியாக அந்தக் கடல் பயணம் எப்படியோ ஆரம்பித்து எங்கேயோ போய் முடிந்தது. அது மட்டுமல்லாமல், நடுக் கடலில் ஒரு நாள் என்ற தலைப்பில் நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை நான் எழுதுவதற்கு அந்தப் பயணம் பெரிதும் பயன் பட்டது” என்கிறார் சாவி. 'சிறப்புக் கட்டுரைகள் (Feature Writing) எழுதுவதற்கு சாவிதான் முன்னோடி. அதற்கு முன்னால் இம்மாதிரிக் கட்டுரைகள் தமிழில் கிடையாது. எழுதுவார்கள், புள்ளி விவரங்களைக் கொட்டித் திணறடிப்பார்கள். இதற்கு மாறாக இங்கே போயிருக்கிறீர்களா? என்ற பகுதியைத் தொடங்கி கொத்தவால் சாவடி முதல் சென்ட்ரல் ஸ்டேஷன் வரை நேர்முக வர்ணனை போல் நகைச்சுவை மிளிர, பாத்திரங்கள் தத்ரூபமாகக் காட்சி 153

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/163&oldid=824476" இலிருந்து மீள்விக்கப்பட்டது