பக்கம்:சாவி-85.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அளிக்கச் சித்திரித்தவர் சாவிதான்' என்று விமரிசகர் சுப்புடு மனம் திறந்து பாராட்டியுள்ளார், சாவி மணிவிழா மலரில். இதற்கெல்லாம் பாலு அவர்கள் சாவியின் எழுத்துத் திறமையில் கொண்டிருந்த நம்பிக்கைதான் காரணம். ஆபீஸ் நேரங்களில் தவிர, முதலாளி தொழிலாளி என்ற பேதமின்றி அவர்களிருவரும் ஒரு குறிப்பிட்ட எல்லையோடு நண்பர்கள் போல் பழகி வந்த முறையை சாவி குறிப்பிடும்போது அவர் முகத்தில் பெருமையும் மகிழ்ச்சியும் பளிச்சிடுகின்றன. விகடன் ஆசிரியர் குழுவில் வேறு யாருக்குமே கிடைக்காத ஒர் அபூர்வ உறவு இது. முதலாளியே நண்பர். நண்பரே முதலாளி பாலு அவர்கள் சாவியின் நெஞ்சில் நிரந்தரமாக இனித்துக் கொண்டிருப்பவர். 'அவர் ஒரு முதலாளி என்ற மரியாதை எனக்கு எப்போதுமே உண்டு. ஆனால் அவரிடம் பணியாற்றிய போது அவரைக் கண்டு நான் பயந்ததில்லை. அப்படி ஒரு வியத்தகு நட்பு காட்டியவர் அவர் என் நகைச்சுவை உணர்வு அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவரது அந்த ரசனை எனக்குப் பிடிக்கும். என் எழுத்துத் திறமை வளர்ந்ததற்கு அவர் ரசனையே முக்கிய காரணம்' என்று நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் சாவி. 154

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/164&oldid=824479" இலிருந்து மீள்விக்கப்பட்டது