பக்கம்:சாவி-85.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மணியன் திருமணம் ‘விகடன் ஆசிரியர் குழாமில், ஒரு கால கட்டத்தில், மற்ற அனைவரையும் விட மணியனுக்கு செல்வாக்கு அதிகம் இருந்தது உண்மை. அப்படி இருந்ததில் தவறு ஏதும் இல்லை" என்கிறார் சாவி. “ஏனென்றால் எங்களில் வயது குறைந்தவர் அவர்தான். எப்போதும் துறுதுறுவென்று இருப்பார். பம்பரமாய்ச் சுழன்று வேலை செய்வார். பாலு அவர்களிடம் பவ்யமாக நடந்து கொண்டு அவர் இட்ட வேலைகளைச் செவ்வனே செய்து முடிப்பார். இப்படிப்பட்ட ஒருவரை நன்றாக 'ஷேப் செய்து வந்தால் பின்னாளில் அவர் விகடனுக்குச் சிறப்பாகப் பயன்படுவார் என்று நிர்வாகம் எண்ணியதில் தவறில்லை தானே? எனக்கும் மணியனுக்கும் இடையே நல்ல நட்பும் உறவும் இருந்தது. அலுவலக விவகாரங்கள் தவிர தனிப்பட்ட வாழ்க்கையிலும் எங்களுக்குள் நல்லுறவு இருந்தது. நிர்வாகம் அதைப் புரிந்து கொண்டு எங்கள் இருவரையும் ஜோடி சேர்த்து இரட்டை நாதஸ்வரக்காரர்கள் போல் ஒருமித்துப் பணியாற்றும்படி வழிவகுத்துக் கொடுத்தது. மணியன் முகத்தில் இளமைக் களை குறைந்து முதிர்ச்சி தெரிவதை கவனித்த பாலு அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'மணியனுக்கு வயதாகிக் கொண்டே போகிறது. நீங்கள்தான் ஒரு நல்ல இடமாகப் பார்த்து அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்' என்று சொன்னார். 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/165&oldid=824481" இலிருந்து மீள்விக்கப்பட்டது