பக்கம்:சாவி-85.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பாலுவின் விருப்பத்துக்கிணங்க சாவி மணியனுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினார். இதற்கிடையில் மணியனே 'ஹிந்து நாளிதழில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அதற்கு வந்த ஜாதகங்கள், புகைப்படங்களைக் கொண்டு வந்து சாவியிடம் தந்து "நீங்கதான் இவ்வளவையும் பரிசீலித்துப் பொருத்தமான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று சொன்னார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் மேகநாதன் என்பவர் சாவியின் நீண்ட நாளைய நண்பர். 'வெள்ளி மணி காலம் தொட்டே சாவிக்குப் பரிச்சயமானவர். அவர் ஒருநாள் சாவியை சத்திய மூர்த்தி பவனில் சந்தித்து 'குளத்து ஐயர் என்று எனக்கொரு நண்பர் இருக்கிறார். திருநெல்வேலிக்காரர். அவருக்கு லலிதா என்றொரு மகள். மயிலாப்பூர் லஸ் பகுதியில் வசிக்கிறார்கள். நல்ல குடும்பம். மணியனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கலாமே. நீங்கள் மனது வைத்தால் திருமணம் நடந்துவிடும்' என்றார். ' 'ஹிந்து'விலிருந்து வந்திருந்த ஜாதகங்களையெல்லாம் கட்டி ஒரமாக வைத்துவிட்டு மறுநாளே குளத்து ஐயர் மகளை நான் மணியனுக்காகப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். பின்னர் மணியனும் பெண்ணைப் பார்க்க விரும்பினார். குளத்து ஐயர், குடும்பத்தாருடன் தம் மகளையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வருவது என்றும், அங்கே மணியன் பெண்ணைப் பார்ப்பது என்றும் ஏற்பாடு. அதன்படியே பஜ்ஜி, சொஜ்ஜியுடன் பெண் பார்க்கும் படலம் முடிந்தது. மணியனுக்கும் பெண் பிடித்து திருமண நாளும் முடிவு செய்யப்பட்டது." என்கிறார் சாவி. ஆனால் சாவியின் பணி அத்துடன் முடிந்து விடவில்லை. திரு. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம் பேசி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தை வாடகையின்றி (மின் கட்டணம் 156

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/166&oldid=824483" இலிருந்து மீள்விக்கப்பட்டது