பக்கம்:சாவி-85.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மட்டும் செலுத்தினால் போதும்) வாங்கித் தந்ததும் சாவிதான். திரு. ஏ.வி.எம். அவர்களிடம் மணியன் திருமணத்துக்கு மண்டபம் கேட்கப் போன போது வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் பெண்ணும் உட்காருவதற்கு ஏற்றதாக இரண்டு நாற்காலிகள் தேர்வு செய்து தரும்படி திரு. ஏ.வி.எம். அவர்கள் சாவியிடம் சொன்னார். ஏ.வி.எம். ஸ்டுடியோ ப்ராபர்ட்டி அறையில் குவிந்து கிடந்த நாற்காலிகளில் ராஜா ராணி நாற்காலிகள் இரண்டைத் தேர்வு செய்தார் சாவி. சே, சே! இதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் வேறு நாற்காலிகள் அனுப்புகிறேன் என்று பொருத்தமான வேறு இரண்டு நாற்காலிகளை ஏ.வி.எம். அவர்களே தேர்ந்தெடுத்து அனுப்பி 'இந்த நாற்காலிகள் எப்படி? என்று கேட்க பிரமாதம்' என்றார் சாவி. அதுவே மணியன் வரவேற்பின்போது மணமக்கள் அமரும் நாற்காலிகளாகி பின்னர் அந்த மண்டபத்தில் நிரந்தரமாக இடம் பெற்றன. 157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/167&oldid=824485" இலிருந்து மீள்விக்கப்பட்டது