பக்கம்:சாவி-85.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சென்றார். ஊட்டி ஏரியில் அன்று காமராஜ் அவர்களின் படகுச் சவாரிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அரசு அதிகாரிகள் கூட்டமும் ஜீப்புகளும் கரையில் காத்திருக்க, சாவியும் கோபுலுவும் காமராஜருடன் படகில் ஏறி ஏரியை ஒரு சுற்றுச் சுற்றி வந்தார்கள். அப்போது காமராஜரின் மதிநுட்பத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு சாவிக்குக் கிடைத்தது. அவர் சொல்கிறார்: "ஒருமுறை மகாத்மா காந்தி அவர்கள் தமிழகம் வந்திருந்த போது பழனிக்கு விஜயம் செய்தார். அப்போது ராஜாஜியும் போயிருந்தார். காமராஜருடன் நானும் போயிருந்தேன். படிகளில் நான் நெட்டுக்குத்தலாக ஏறிக் கொண்டிருந்ததைப் பார்த்த காமராஜர் இப்படிப் படியேறக் கூடாது. மேலே போய்ச் சேருவதற்குள் கால் வலிக்கும். குறுக்கும் நெடுக்குமாக - ஸிக் லாக்காக - ஏறுங்க. அப்பத்தான் படி ஏறும் சிரமம் தெரியாது” என்று அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் அப்படி ஏறியதைப் பார்த்து அதைப் போலவே நானும் பின் தொடர்ந்து சென்றேன். வேகமாகவும் ஏற முடிந்தது. கால் வலியும் இல்லை.' காமராஜருக்கு இருந்த அனுபவ அறிவு காரணமாக படிப்பறிவு மிகுந்தவர்கள்கூட அவரது அந்த அனுபவத்தின் முன்னே திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். அவரிடம் சிலர் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கொண்டு போவார்கள். அது சம்பந்தமாக காமராஜர் கேட்கும் ஒரு கேள்விக்குக்கூட பதிலளிக்க முடியாமல் திணறிப் போவார்கள். இதைப் பல முறை சாவி உடனிருந்து கவனித்திருக்கிறார். - 'ஒரு சமயம் பஸ் முதலாளிகள் ஏழுெட்டு பேர் காமராஜரைப் பார்க்க வந்தார்கள். எங்களுக்கு இந்தத் தொழிலில் லாபமே இல்லை. அதனால் வரியைக் குறைக்க வேண்டும்’ 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/169&oldid=824489" இலிருந்து மீள்விக்கப்பட்டது