பக்கம்:சாவி-85.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இந்தி எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் இந்தியில் இருந்த ஸ்டேஷன் பெயர்களை அழிக்கும் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் அது. தி.க. தோழர்கள் தார் வைத்து அழித்து விட்டுப் போவார்கள். அடுத்த சில மணி நேரத்துக்குள், ரெயில்வே நிர்வாகம் அந்தத் தார் மீது மண்ணெண்ணெய் வீசி சுத்தப்படுத்தி விட்டுப் போகும். இது பற்றிப் பெரியார் தமக்கே உரிய பாணியில் 'இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தால் யாருக்கு லாபம்னு உனக்குத் (கூட்டத்தினரை) தெரியுதா? லாபம் பாப்பானுக்குத்தான். ஏன்னு கேளு. தார் காண்ட்ராக்ட் எடுத்தவன் யாரு? அவன் ஒரு பாப்பான். கெரசின் காண்ட்ராக்ட் எடுத்தவன் யாரு? அவனும் ஒரு பாப்பான். ஆக, தார், கெரசின் இரண்டும் காண்ட்ராக்ட் எடுத்து லாபம் சம்பாதிச்சவன் பாப்பான்' என்றார். பெரியார் அவர்கள் தமது சொந்த வாழ்க்கையில் பல பிராமணர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தார் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. பார்ப்பனியம், பிராமண ஆதிக்கம் ஆகியவற்றைத்தான் அவர் தம் வாழ்நாள் முழுதும் எதிர்த்துப் போராடினாரே தவிர, பிராமணர்களை அல்ல. இந்த உண்மை தெரியாமல் அவர் மீது கோபப்பட்ட பிராமணர்கள் உண்டு. பெரியாரின் சொற்பொழிவைக் கேட்டதிலிருந்து அவர் மீது எனக்கு ஒரு பாசமே வந்துவிட்டது. பிராமணியத்துக்கு எதிராக அவர் எடுத்து வைக்கும் ஆதாரங்களும் உண்மைகளும் கோர்ட்டில் நீதிபதி முன்பாக ஒரு வழக்கறிஞர் பாயிண்ட் பாயிண்ட்டாகச் சொல்லி வாதாடுவது போலிருக்கும். பெரியாரின் பேச்சுத் திறனில் மயங்கிப் போன நான் பின்னர் அவர் எங்கே பேசினாலும் அங்கெல்லாம் போய் அவரது பேச்சைக் கேட்டு விட்டு வருவேன்' என்கிறார் சாவி. அது மட்டுமல்ல; தந்தை பெரியாரை என்றாவது ஒரு நாள் சந்தித்துப் பேச வேண்டுமென்ற கட்டுக்கடங்காத ஆவல் 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/181&oldid=824516" இலிருந்து மீள்விக்கப்பட்டது