பக்கம்:சாவி-85.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சாவியின் உள்ளத்தில் இருந்து வந்தது. விகடனில் பணியாற்றிய போது அதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. சாவியும் மணியனும் திருச்சிக்குப் போய் அவரைச் சந்தித்தார்கள். "நாங்கள் போன சமயம் பெரியார் ஊஞ்சலில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தார். "விகடனிலிருந்து இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்" என்று அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதும் "அப்படியா வரச் சொல்லு" என்று சொல்லி அனுப்பினார். நாங்கள் உள்ளே போனதும் 'வாங்கய்யா!' என்று அன்போடு எங்களை வரவேற்றார் பெரியார். இரண்டு மணி நேரம் பல விஷயங்கள் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விவரமாகவும், விஸ்தார மாகவும் பதிலளித்தார். வாசன் அவர்கள் பற்றி அக்கறையோடு விசாரித்தார். 'ஐயா ஜாதி விகிதாசாரப்படி அரசு உத்தியோகம் என்றெல்லாம் நீங்க சொல்றது சரியில்லைன்னு நான் நினைக்கிறேன். தகுதி அடிப்படையில் கொடுத்தால் என்ன தப்பு? என்று கேட்டேன் நான். பெரியார் சொன்னார்: "எங்கே ஐயா ஜாதி இல்லை? ஜெயில்ல போய்ப் பாரு. முதலியார், கவுண்டர், வன்னியர் இப்படிப் பல ஜாதிக் காரன் இருக்கான். கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு ஜாதிக் காரன் வெளியிலே எத்தனை பேர் இருக்கானோ அதே விகிதாசாரப்படிதான் ஜெயிலுக்குள்ளேயும் இருக்கான். என்ன, பிராமணன் மட்டும் கொஞ்சம் குறைவா இருப்பான். ஏன்னா அவனுக்குக் கொலை, கொள்ளைன்னா பயம். ஜெயில்லே விகிதாசாரப்படி இருக்கிற மாதிரி அரசு உத்தியோகம், கல்லூரி அட்மிஷன் விஷயத்திலும் இருக்க வேண்டியதுதானே? அதை விட்டுட்டு தகுதி அடிப்படை என்ன வேண்டியிருக்குது? வெங்காயம்' 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/182&oldid=824518" இலிருந்து மீள்விக்கப்பட்டது