பக்கம்:சாவி-85.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. புது மனை புகுவிழா சாவிக்கு, காமராஜ் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பல சந்தர்ப்பங்களில் கிடைத்தபோதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமக்கென எந்த உதவியையும் ஒரு தரம் கூடப் பெற்றதில்லை. அதே சமயம், மற்றவர்களுக்காக காமராஜரிடம் போய் உதவி கேட்க அவர் தயங்கியதுமில்லை. ஒரு சமயம் காமராஜருடன் சாவியும் டெல்லிக்கு விமானத்தில் பயணம் போய்க் கொண்டிருந்தார். அப்போது, 'ஆனந்த விகடனுக்கு கலர் பிரிண்ட்டிங் மெஷின் ஒன்று தேவைப்படுகிறது. அதற்கு நீங்கதான் உதவி செய்யணும். இந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் குறுக்கிடாமல் சட்ட பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தர வேண்டும். ஃபைனான்ஸ் மினிஸ்டர் டி.டி.கே.யிடம் நீங்க ஒரு வார்த்தை சொன்னால் போதும், காரியம் உடனே நடந்துடும். ஆனந்த விகடனில் நீண்ட காலமாக காங்கிரஸை ஆதரித்துப் பக்கம் பக்கமாகத் தலையங்கம் எழுதி வருவது உங்களுக்கே தெரிந்ததுதான்' என்றார் சாவி. 'இவ்வளவுதானே... நாளைக்கே டி.டி.கே. கிட்ட சொல்லிடறேன். இது சம்பந்தமா ஏதாவது பேப்பர் வெச்சிருக் கீங்களா, கைவசம் இருக்கா?' என்று கேட்டார் காமராஜர். “வைத்திருக்கிறேன்' என்று சொல்லி அது சம்பந்தப்பட்ட கடிதங்களை எடுத்துக் கொடுத்தார் சாவி. 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/186&oldid=824523" இலிருந்து மீள்விக்கப்பட்டது