பக்கம்:சாவி-85.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அவற்றை வாங்கிக் கொண்ட காமராஜர் "இது இருக்கட்டும், நீங்க சொந்தமா வீடு கீடு ஏதாவது வாங்கியிருக்கீங்களா?" என்று விசாரித்தார். "இல்லை... சொந்தமா வீடு வாங்கற அளவுக்கு எனக்கு வசதியெல்லாம் இல்லை.” 'அப்படியா? நான் சென்னைக்குத் திரும்பியதும் மினிஸ்டர் வெங்கட்ராமன் கிட்ட சொல்றேன். நீங்க அவரைப் போய்ப் பாருங்க' என்றார். திரு. வெங்கட்ராமன் அவர்கள் அப்போது தமிழக வீட்டு வசதி அமைச்சராக இருந்தார். அப்போது ஹவுஸிங் போர்ட்" கிடையாது. நந்தனத்தில் சி.ஐ.டி. என்ற பெயரில் இயங்கி வந்தது. அங்கே பல பேருக்கு வீட்டு மனைகள் அலாட்" செய்து கொண்டிருந்தார்கள். ஆர்.வி. அவர்களைப் பார்க்கப் போயிருந்தார் சாவி. தனக்கு வீட்டு மனை கேட்பதற்காக அல்ல. சாவி முன்னின்று தொடங்கிய சத்ய சபா நிகழ்ச்சிகள் நடைபெறப் போகும் சமயம் அது. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் ரொம்பவும் மேடு பள்ளமாக இருந்தது. சிட்டி இம்ப்ரூவ் மென்ட் ட்ரஸ்ட் (சி.ஐ.டி.) வசம் ஒரு டிராக்டர் இருந்தது. 'சி.ஐ.டி. சேர்மனிடம் ஒரு வார்த்தை சொல்லி மைதானத்தை நிரப்பச் சொல்லுங்க. அதற்குரிய வாடகையைக் கொடுத்து விடுகிறோம் என்று கேட்பதற்காகவே ஆர்.வி. அவர்களைப் போய்ப் பார்த்தார். திரு. வெங்கட்ராமன் அவர்களோ சாவியைப் பார்த்தவுடன் மேசை டிராயரைத் திறந்து ஒரு விண்ணப்பத் தாளை எடுத்து நீட்டி, முதல்ல இந்த அப்ளிகேஷன் பாரத்தைப் பூர்த்தி செய்து கொடுங்க. தலைவர் சொல்லியிருக்கார் என்றார். சாவி அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து ஆர்.வி.யிடமே 169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/187&oldid=824524" இலிருந்து மீள்விக்கப்பட்டது