பக்கம்:சாவி-85.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இதற்கிடையில் சாவிக்கு ரஷ்யா செல்ல அழைப்பு வந்தது. அந்த நேரம் பார்த்து மழை சீசனும் தொடங்கி விட்டதால் வீடு கட்டும் வேலை தாமதப்பட்டது. அப்புறம் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் கட்டிட வேலை முடிந்து, புதுமனை புகுவிழா நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் நாதஸ்வர இசையுடனும், கிருபானந்த வாரியாரின் மீனாட்சி கல்யாண கதாகாலட்சேபத்துடனும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காமராஜ், ராசாராம், சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, பகவான்தாஸ் கோயங்கா, ஏ.நடராஜன், சதாசிவம், திருமதி எம்.எஸ்., பின்னாளில் சென்னை ஷெரீஃபாகப் பதவி வகித்த சாவியின் நண்பர் ஆர்.ராமகிருஷ்ணன், கல்கி வைத்தியநாதன் என்று பல்துறை பெருமக்களும் விழாவுக்கு வந்து சாவியை வாழ்த்தி விட்டுப் போனார்கள். அன்று மாலை வாரியார் சுவாமிகள் மீனாட்சி கல்யாணம் கதை கேட்க காமராஜர் வந்தது மட்டுமின்றி இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கதை முழுக்கக் கேட்டு விட்டுப் போனார். காலையில், வீனஸ் ரத்னம் ஐயர் அவர்கள் தம் மனைவியுடன் வந்து குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்தினார். அந்தப் புதுமனை புகுவிழாவின் போது சாவி தனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மிகப் பெரிய வாய்ப்பை சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக் குனரும், சாவியின் குடும்ப நண்பருமான ஏ.நடராஜன் அவர்கள் விவரிக்கிறார்: 'அன்று பெருந்தலைவர் காமராஜரிடம் சாவி அவர்கள் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் தலைவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது 1952ல் நான் முசிறியில் பள்ளி மாணவனாக இருந்த சமயம் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் முன்னிலையில் பேசி அவர் கரங்களினால் பரிசு பெற்ற சம்பவத்தை நினைவு கூர்ந்தேன். உடனே சற்றும் 171

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/189&oldid=824528" இலிருந்து மீள்விக்கப்பட்டது