பக்கம்:சாவி-85.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 'அடடே அந்த மீட்டிங் இன்னிக்கா? நாளைக்கின்னு தானே சொன்னாங்க" என்று பதறிப்போன காமராஜ் பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே சட்டென்று எழுந்து கையைக் கழுவிக் கொண்டு பறந்து போய்க் காரில் ஏறிக் கொண்டார். இந்தச் சமயம் பார்த்து வெளியே பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. மழையின் புகைச்சலான கனத்தில் எதிரே நிற்பவர் யார் என்று கூடத் தெரியவில்லை. நிழல் உருவங்களாக மனிதர்கள். அந்த மழையில் காரை எடு' என்று காமராஜ் அவசரப் படுத்தியதும் சாவி எதுவும் புரியாமல் திகைத்து நடராஜனோடு ஒடிப் போய் காரில் ஏறிக் கொண்டார். நடராஜனும், சாவியும் காரில் ஏறியதைக் கண்டதும் காமராஜரின் முகம் மாறியது. இவர்கள் ஏன் காரில் ஏறினார்கள் என்பது போல் இருவரையும் கோபமாகப் பார்த்தார். கார் சற்று தூரம் போனதும் நடராஜன் பக்கம் திரும்பிப் பார்த்து, "ஏய் புத்தியிருக்கா உனக்கு, புத்தி! நான் இப்ப எங்கே போயிட்டிருக்கேன் தெரியுமில்லே. நேரு வீட்டில் முக்கியமான மீட்டிங். நீ என் கூட காமிராவுடன் வந்தா, ஏதோ காமராஜ் போட்டோகிராயரை ஏற்பாடு செய்துகிட்டு சாவகாசமா வரார் போல இருக்குன்னு நினைக்க மாட்டாங்களா? இது உனக்குத் தெரிய வேணாம்? புத்தி இருக்கா புத்தி!' என்று பொரிந்து தள்ளவும் சாவிக்கு ஏன்தான் காரில் ஏறினோமோ? என்று தர்ம சங்கடமாய்ப் போய் விட்டது. காமராஜருக்கு இப்படி ஒரு சங்கடத்தைக் கொடுத்து விட்டோமே என்று தவித்துப் போன சாவி இந்த டோஸ் தனக்கும் சேர்த்துதான் என்று எண்ணிக் கொண்டார். மழையின் வேகம் மேலும் கூடி டெல்லியே வெள்ளக் காட்டில் மிதந்தது. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் நின்றது. 174

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/192&oldid=824536" இலிருந்து மீள்விக்கப்பட்டது