பக்கம்:சாவி-85.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 புத்தி? என்று எரிமலையாக வெடித்த அந்தக் காமராஜரா இப்படி பச்சை வாழைப் பட்டையாய் மாறிப் பேசுகிறார் நம்ப முடிய வில்லையே காமராஜரின், இந்த இரண்டு உச்ச கட்ட மன நிலைகளையும் - எக்ஸ்ட்ரீம் மூட்ஸ் என்பார்களே - அந்த இரண்டையும் பார்த்தவன் நா 茹,” சாவி தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது அசோக் நகரில் குடியிருந்தார். ஒருநாள் காமராஜர் அவர்கள் சாவி வீட்டுக்கு இரவு விருந்துக்கு வந்தார். அன்று பார்த்து பெரம்பூர் ரெயில்வே இன்ஸ்ட்டிட்யூட் அரங்கில் சாவியின் வாஷிங்டனில் திருமணம் நாடகம். அப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும் நாடகம்தான் அது என்றாலும் அன்றைய தினம் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்குவதாக இருந்ததால் அந்நிகழ்ச்சிக்கு சாவியும் வருவதாக ஒப்புக் கொண்டிருந்தார். சற்றும் எதிர்பாராமல் காமராஜ் அவர்கள் அன்று பார்த்து சாப்பிட வருவதாகச் சொல்லி விட்டதால் சாவியால் நாடகத்துக்குப் போக முடியவில்லை. தம்முடைய இந்த இயலாமையை விளக்கி சபா செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார் சாவி. அக்கடிதத்தை நாடக இடைவேளையின் போது எம்.ஜி.ஆர். முன்னிலையில் "மைக்கில் படித்து விட்டார்கள். 'ஓகோ என்னைவிட காமராஜர்தான் சாவிக்கு முக்கியமாகிப் போய் விட்டாரோ என்ற கோபம் எம்.ஜி.ஆருக்கு வந்துவிட்டது. அதை அவர் அப்போது வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் பின்னர் சாவியை நேரில் சந்திக்க நேரிட்டபோது, சாவியுடன் பேசாமல், முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டதிலிருந்து சாவி அதைப் புரிந்து கொண்டார். சாவி அதற்காக வருத்தப்படவும் இல்லை. 176

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/194&oldid=824542" இலிருந்து மீள்விக்கப்பட்டது