பக்கம்:சாவி-85.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 வேலைகளைத் தள்ளி வைத்து விட்டு சாவியுடன் உரையாடத் தயாராகி விடுவார். சாவியின் மகன் பாலசந்திரன் (பாச்சா) பற்றி ஒருமுறை நாயுடு விசாரித்தார். "பையன் என்ன செய்கிறான்?" 'கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டான். இப்போதைக்குச் சும்மாதான் இருக்கிறான்' என்றார் சாவி, "ஏன் நம்ம ஆட்டோமொபைல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிக்கட்டுமே; தொழிற்கல்வி பின்னால உதவியாக இருக்குமே. சென்னைக்குப் போனதும் முதல் வேலையாக அவனை என்னிடம் அனுப்பி வையுங்கள்' என்று சொல்லி அனுப்பினார் நாயுடு. அடுத்த வாரமே புறப்பட்டுச் சென்ற பாச்சா, கோவையில் நாயுடுவின் கண்காணிப்பில் ஏறத்தாழ ஒராண்டு காலம் ஆட்டோமொபைல் பயிற்சி பெற்றார். அந்த ஒரு வருடம் தம் வீட்டிலேயே தங்கிப் படிக்கட்டும் என்று அசோகா கிருஷ்ணா செட்டியார் சாவியிடம் சொன்னார். பாச்சா அப்படியே அசோகா செட்டியார் வீட்டில் தங்கி ஜி.டி.நாயுடுவிடம் தொழிற்கல்வி படித்து முடித்தார். பாச்சா இப்போது தன் மனைவி, மகளுடன் அமெரிக்காவில் 'செட்டில் ஆகிவிட்ட போதிலும் அப்போது கோவையில் பெற்ற பயிற்சியும், அசோகா செட்டியார் வீட்டில் கற்றுக் கொண்ட ஒழுக்கநெறிகளும் அவன் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக அமைந்தன. சாவி அவர்கள் கோவை போனால் பொதுவாக பயனர் மில்ஸ் அதிபர் ஜி.ஆர்.கோவிந்தராஜுலு அவர்களின் விருந்தினர் இல்லத்தில்தான் தங்குவது வழக்கம். ஜி.ஆர்.ஜியும் அவரது மனைவி கல்வியாளர் திருமதி சந்திரகாந்தி அம்மையாரும் சாவி அவர்களின் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டவர்கள். அவர்களுடைய வீட்டிலோ, கல்லூரியிலோ நடைபெறும் சிறப்பு 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/200&oldid=824557" இலிருந்து மீள்விக்கப்பட்டது