பக்கம்:சாவி-85.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அன்று வேறொரு இடத்தில் முக்கிய பணி ஒன்று சாவிக்கு இருந்தது. அதற்கு நேரமாகிவிட்டதால் சாவி புறப்படத் தயாரானார். ஆனால் நாயுடு விடுவதாயில்லை. சாப்பிட்டு விட்டுத்தான் போகனும் என்று பிடிவாதம் பிடித்தார். 'இன்று முக்கியமான வேலை இருக்கு... நான் போய் விட்டு இன்னொரு சமயம் வருகிறேன். என்னை விடுங்க... என்றார் சாவி. நாயுடு என்ன சொல்லியும் சாவி கேட்பதாயில்லை. கடைசியில், சரி; அப்படின்னா போயிட்டு வாங்க என்று விடை கொடுத்து அனுப்பி விட்டார். அடுத்த நிமிடம் சாவி காரில் ஏறிப் புறப்பட்டபோது, கோபால் பாக் வாயிற்கதவு மூடப்பட்டு உள்பக்கம் பூட்டி இருந்தது. வெளியே போக முடியாமல் சாவி திண்டாடினார். உள்ளே திரும்பிப் போய் நாயுடுவைப் பார்த்து "வாயிற்கதவு பூட்டியிருக்கிறதே திறந்து விடச் சொல்லுங்கள்' என்றார். நாயுடு சிரித்துக் கொண்டே, 'அப்படியா! நீங்கதான் சாவி ஆச்சே. திறந்து கொண்டு போக வேண்டியதுதானே' என்றார். சாவியின் மகள் ஜெயந்தியின் திருமணம் சென்னை மயிலாப்பூரில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தபோது ஜி.டி.நாயுடு அவர்கள் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி, பெரிய கோலி குண்டு போன்ற ஒரு கடிகாரத்தைப் பரிசாக அளித்து விட்டுச் சென்றார். பார்த்தால் அது ஒரு வித்தியாசமான கடிகாரம். "ஜெர்மனியிலிருந்து பன்னிரண்டு கடிகாரங்கள் வாங்கி வந்தேன். அதில் ஒன்றைத்தான் உங்கள் மகள் ஜெயந்திக்குத் தருகிறேன்' என்றார் நாயுடு. கண்ணாடி குண்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் அந்தக் 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/202&oldid=824561" இலிருந்து மீள்விக்கப்பட்டது