பக்கம்:சாவி-85.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கடிகாரத்தை என் மகள் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறாள். அதுவும் இன்று வரை சீராக ஒடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கடிகாரத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. அதை சாவி அவர்களே நினைவு கூர்கிறார்: ‘நாயுடு அவர்களுக்கு ராமசாமி என்று ஒரு நெருங்கிய நண்பர். அவர் டாக்டரும் கூட. அவர் லூகோதர்மா குறைபாட்டைப் போக்கவல்ல அருமையான ஒரு மருந்து வைத்திருந்தார். ஒருமுறை இருவரும் ஜெர்மனிக்குப் போய் இருந்தார்கள். 'டாக்டர் ராமசாமி இந்தியாவிலிருந்து வந்துள்ளார். அவரால் லூகோதர்மாவைக் குணப்படுத்த முடியும்' என்று அந்த ஊர் தினப்பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார் நாயுடு. பலபேர் வந்து சிகிச்சை பெற்றார்கள். அவர்களில் தொழிலதிபர் ஒருவரின் மகள் இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வந்திருந்தாள். டாக்டர் ராமசாமி அளித்த சிகிச்சையில் அவளின் குறைபாடு நீங்கி விட்டது. அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் அப்பாவிடம் இந்திய டாக்டரைப் பற்றி ஒகோவெனப் புகழ்ந்திருக்கிறாள். அப்பா ஒரு கடிகாரத் தொழில் அதிபர். நாயுடுவையும், ராமசாமியையும் தம்முடைய தொழிற்சாலைக்கு அழைத்துப் போய் சுற்றிக் காட்டினார். எல்லாம் பார்த்து முடிந்ததும் உங்களுக்கு என்ன வேண்டுமோ, கேளுங்கள் என்று நாயுடுவிடம் கேட்டார். நாயுடுவுக்கு எப்போதுமே தொழில் சம்பந்தப்பட்ட நுட்பங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். உங்கள் கடிகாரங்களின் தரத்துக்கு முக்கிய காரணமான அந்த ஸ்பிரிங்கின் சூட்சுமத்தை எனக்குச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார். பொதுவாகத் தொழில் ரகசியத்தை யாரும் வெளியிட மாட்டார்கள். மகளைக் குணப்படுத்திய டாக்டரின் நண்பர் 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/203&oldid=824563" இலிருந்து மீள்விக்கப்பட்டது