பக்கம்:சாவி-85.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. அறிஞர் அண்ணாவின் பாராட்டு புதுமைகளைப் புகுத்தி, புதிய வடிவங்களில் கதை கட்டுரைகள் புனைவதில் சாவிக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது அவருக்குக் கட்டோடு பிடிக்காது. புதிய கோணங்களில் அவர் எழுதிய இங்கே போயிருக்கிறீர்களா?', கேரக்டர், வாஷிங்டனில் திருமணம் போன்ற படைப்புகள் இதற்கு நல்ல உதாரணங்கள். ஒரு இடத்தை நாம் சென்று பார்த்திருந்தாலும், அதையே சாவி அவர்கள் தம்முடைய 'பார்வையில் கண்டு அவருக்கே உரித்தான பாணியில் நகைச் சுவையுடன் சொல்கிறபோது அட, நாமும்தான் அங்கே போயிருக் கிறோம், ஆனாலும் நமக்கு இதெல்லாம் கண்ணில் படவில்லையே என்று அவற்றைப் படிக்கும் போது உணர்கிறோமே, அதுதான் அவரது எழுத்துக்கு வெற்றி. 'இங்கே போயிருக்கிறீர்களா? போன்ற கட்டுரைகளில் பொதுவாக கண்ணால் கண்ட காதால் கேட்ட விஷயங்களைத்தான் மற்றவர்கள் எழுதுவார்கள். சாவியோ தம்முடைய மூக்குக்கும் வேலை தந்து அதைத் தம் எழுத்திலே கொண்டு வருவார். ஆங்காங்கே என்னென்ன மணங்கள் வீசுமோ, அவற்றையெல்லாம் தம் எழுத்தில் மணக்கச் செய்வார். பொள்ளாச்சி சந்தையில் வீசிய பலாப்பழ வாசனை, ஊட்டி மலர்க்காட்சியில் முகர்ந்த மலர்களின் மணம் இப்படி வாசனைகளின் மூலமே அந்த இடங்களை வாசகர்களும் கண்டு மகிழும்படிச் செய்தார். 187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/205&oldid=824567" இலிருந்து மீள்விக்கப்பட்டது