பக்கம்:சாவி-85.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. அருட்செல்வர் மகாலிங்கம் 'அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் ஆழமான நட்புதான் என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு என்று சாவி அவர்கள் மிகப்பெருமையுடன் சொல்லிக் கொள்வதுண்டு. சாவி அவர்களின் வீட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் எதுவானாலும் இன்றளவும் அருட்செல்வர் மகாலிங்கம் அவர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். அது மட்டுமல்ல; சாவி அவர்களைத் தம் வீட்டுக்கு அடிக்கடி அழைத்து அவரோடு சேர்ந்து சாப்பிடுவதையும் உரையாடி மகிழ்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சாவியின் எழுபதாவது பிறந்தநாளின் போது மகாலிங்கம் அவர்கள், எழுபதாயிரம் ரூபாய் நிதி சேர்த்து யாரும் எதிர்பாராத வகையில் அந்தப் பண முடிப்பை நேரில் கொண்டு போய்க் கொடுத்தார். ஆனால் அதை அவர் சாவி அவர்களிடம் தராமல், திருமதி சாவி (ஜானகி அம்மாள்) அவர்களிடம் தந்து, அம்மா... இதை நீங்க பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் தந்தால் ஏதாவது செலவு செஞ்சிடுவார்' என்றார் சிரித்துக் கொண்டே. ஆனால், அந்த அம்மாள் மகாலிங்கம் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை. அந்தப் பணத்தை அப்போதே சாவி 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/208&oldid=824573" இலிருந்து மீள்விக்கப்பட்டது