பக்கம்:சாவி-85.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அவர்களிடம் தந்து விட்டார். சாவியும் அந்தப் பணத்தை மகாலிங்கம் அவர்கள் நினைத்தபடியே தம்மிடம் வைத்துக் கொள்ளவில்லை. கிருஷ்ண கான சபா, மியூசிக் அகாடமி, நாரத கான சபா, வீனஸ் காலனி ஆஸ்திக சமாஜம், கோவையில் கிரிதாரி பிரசாத் அவர்களின் கீதா டிரஸ்ட் போன்ற அமைப்புகளுக்குச் சமமாகப் பங்கிட்டுத் தந்து விட்டார். கர்நாடக இசையிலும் ஆன்மீகத்திலும் சாவி அவர்களுக்கு உள்ள அதீத ஈடுபாடே இதற்குக் காரணம். சாவி - மகாலிங்கம் நட்பு இறுகிய பிறகு மகாலிங்கம் அவர்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் ராமலிங்கர் பணி மன்ற விழாக்களிலும் பாரதியார் பிறந்த தின விழாக்களிலும் சாவிக்கு முக்கிய பொறுப்பை அளித்துப் பங்கேற்கச் செய்து வருகிறார். சாவி அவர்களைப் பற்றி மகாலிங்கம் அவர்கள் சொல்கிறார்: 'ஆசிரியர் சாவியிடம் அகராதி ஒன்று இருந்தால் அதில் அசாத்தியம்' என்ற வார்த்தை நிச்சயமாக இருக்காது. பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் விஷயத்தில் அசாத்தியமானது ஒன்றுமில்லை என்று பலமுறை நிரூபித்துக் காட்டியவர். இன்றைய தமிழ் நாட்டில் இருக்கும் எழுத்தாளர்களில் சாவிக்கு இணையாக நகைச்சுவையுடன் பிறர் மனம் நோகாமல் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குக்கூட இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இன்றைய தினம் தேசம் முழுவதும் உள்ள எழுத்தாளர் களின் நகைச்சுவைப் படைப்புகளை வரிசைப்படுத்தினால் அதில் ஆசிரியர் சாவியின் வாஷிங்டனில் திருமணம், இங்கே போயிருக்கிறீர்களா? போன்ற கதை கட்டுரைகளுக்கு ஈடாக வேறு ஒன்றையும் சொல்லிவிட முடியாது. 191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/209&oldid=824575" இலிருந்து மீள்விக்கப்பட்டது