பக்கம்:சாவி-85.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அன்பே வா அனுபவம் இங்கே போயிருக்கிறீர்களா? தொடர் கட்டுரைகளை எழுதத் தொடங்குவதற்கு முன்பாகவே எந்தெந்த இடங்களுக்குப் போய் எழுத வேண்டும் என்பதைப் பட்டியிலிட்டு அதை ஆனந்த விகடன் பொறுப்பாசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றிருந்தார் சாவி. ஏதாவது ஒரு வெளிப்புறப் படப்பிடிப்பு பற்றி எழுதப்போவதாகவும் அந்தப் பட்டியலில் குறிக்கப்பட்டிருந்தது. அந்தக் குறிப்புக்கு எதிரில் அப்படி எழுதுவதாக இருந்தால் ஏ.வி.எம். நிறுவனத்தின் படப்பிடிப்புக்குப் போய் எழுதலாம்' என்று பாலு அவர்கள் எழுதியிருந்தார். இதை அடுத்து, ஏ.வி.எம். அவர்களோடு தொடர்பு கொண்டு இது பற்றி விவரித்து அவுட்டோர் போகும்போது தகவல் தந்தால் தானும் அவர்களோடு சென்று கட்டுரை எழுத வசதியாக இருக்கும் என்று சொல்லி வைத்திருந்தார். 'ஏ.வி.எம். மெய்யப்பன் அவர்களிடமிருந்து ஒரு நாள் தகவல் வந்தது. 'அன்பே வா படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆருடன் சிம்லா செல்ல திட்டமிட்டுள்ளோம். தங்களால் வர முடியுமா?" உடனே கிளம்ப வேண்டிய அவசரம். பாலு அவர்கள் அப்போது தமக்குச் சொந்தமான படப்பை கிராமத்துக்கருகில் உள்ள பண்ணையில் இருந்தார். அவரைச் சந்தித்து, ஏ.வி.எம். அவுட்டோர் படப்பிடிப்புக்குப் 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/212&oldid=824582" இலிருந்து மீள்விக்கப்பட்டது