பக்கம்:சாவி-85.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் வரும் நண்பர் கிருஷ்ணாஜியிடம் தம் மனநிலையை நட்பு ரீதியில் பகிர்ந்து கொண்டார் சாவி, சாவியின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட கிருஷ்ணாஜி "கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்' என்று ஆறுதல் கூறிவிட்டு அடுத்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்டார். அப்புறம் யாரைப் போய்ப் பார்த்தார், என்ன பேசினார் என்பதெல்லாம் அப்போது சாவிக்குத் தெரியாது. ஆனால் இதற்குப் பிறகு செட்டியாரே வாசன் அவர்களை நேரில் சந்தித்து ஷல்ட்டிங் பற்றி விகடனில் ஒரு கட்டுரை வந்தால் அது மிக்க உதவியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். அதை அடுத்து வாசன் அவர்கள் தம் மகன் பாலுவை அழைத்துப் பேசி யிருக்கிறார். சாவி இது பற்றிய கவலையைத் தள்ளி வைத்து விட்டு மியூஸிக் அகாடமியில் போய் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் அவரைத் தேடி வந்து ஜெமினி ஹவுஸிலிருந்து பாலு உங்களைக் கூப்பிடுகிறார். உடனே போங்கள் என்றார். கர்நாடக இசை மீது சாவிக்கு உள்ள ஆர்வமும், இசை விழாவின்போது மாலை நேரங்களில் சாவி அகாடமியில்தான் இருப்பார் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். எனவே அவரை அங்கே கண்டுபிடிப்பது எளிதாயிற்று. பாலு அழைக்கிறார் என்றதும் அகாடமிக்கு அருகிலேயே இருந்த ஜெமினி ஹவுஸுக்கு நடந்தே போய்விட்டார் சாவி. பாலு அவர்கள் சாவியிடம் எதைப் பற்றியுமே விசாரிக் காமல், அன்பே வா அவுட்டோர் ஷல்ட்டிங் பற்றிய கட்டுரை விகடனில் இந்த வாரமே வரணும். ராத்திரியே எழுதி கம்போஸிங்குக்கு அனுப்பி விடுங்கள் என்று மட்டும் ஒரு உத்தரவு போல் சொல்லி அனுப்பி விட்டார். 197

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/215&oldid=824589" இலிருந்து மீள்விக்கப்பட்டது