பக்கம்:சாவி-85.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சாவி மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரியென்று சொல்லி விட்டு அன்று இரவே இமயத்தில் எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அச்சுக்கு அனுப்பி விட்டார். அது அந்த வாரமே விகடனில் வெளியாயிற்று. ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு செயல் பட்டிருக்கிறார் என்பது பின்னர்தான் சாவிக்குத் தெரிய வந்தது. அந்தக் கட்டுரை ஆனந்த விகடனில் வெளியாவதற்கு ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் தாம் மேற்கொண்ட முயற்சி பற்றி விவரிக்கிறார்: 'நண்பர் கிருஷ்ணாஜி அவர்கள் என்னிடம் வந்து விவரங்களைச் சொல்லி இந்தக் கட்டுரை எப்படியாவது ஆனந்த விகடனில் வெளிவந்தாக வேண்டும். இதற்கு என்ன வழி என்பதை உங்களிடம் ஆலோசிப்பதற்குத்தான் உங்களைத் தேடி வந்துள்ளேன் என்றார். 'எந்தக் காரணத்தினால் இந்தச் சிக்கல் எழுந்திருந்தாலும் பரவாயில்லை. என்னைப் பொறுத்தவரை எனக்கு இது சொந்தப் பிரச்சினை என்று கிருஷ்ணாஜி அவர்களிடம் தெரிவித்தேன். ஏனென்றால் ஏ.வி.எம். நிறுவனத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிப்பதற்கு ஏ.வி.எம். அவர்கள் விரும்பியபோது அதைப் பேசி முடித்தவன் நான்தான். சரோஜாதேவி அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஏ.வி.எம். அவர்கள் விரும்பிய போது, சரோஜாதேவியோடு பேசி ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்தவனும் நான்தான். மேலும் அன்பே வா' திரைப்படம் 1966ஆம் ஆண்டு பொங்கல் நாளிலே திரையிடப்பட வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். அவர்களுடைய கால்ஷிட் பற்றாக்குறை ஏற்பட்டபோது என்னுடைய சொந்தப் படமான 'நான் 198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/216&oldid=824591" இலிருந்து மீள்விக்கப்பட்டது