பக்கம்:சாவி-85.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. கதிர் காலம் - 1 ஆனந்த விகடனில் பணியாற்றிய அந்தப் பத்தாண்டு காலம் சாவியின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்து விட்ட பசுமையான நாட்கள். அவரது பத்திரிகை வாழ்க்கையில் மிக முக்கிய நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் அவ்வப்போது நேர்ந்த சில நெருடல்களை அவர் மறக்கவில்லை. கென்னடியின் கதை விவகாரம் சற்று அதிகமாகவே அவரைப் பாதித்து விட்டது. இந்த நேரத்தில்தான் இண்டியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தினமணி கதிரை இரண்டாம் முறையாக மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எக்ஸ்பிரஸ் நிர்வாகப் பொறுப்பில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.வி.சாமி அவர்கள், ஒருநாள் சாவியைத் தம் வீட்டுக்கு அழைத்து, ஒரு மாம்பழத்தை முழுசாகத் தந்து 'முதலில் இதைச் சாப்பிடுங்கள். அப்புறம் பேசுவோம். நான் சொல்லப் போகும் விஷயமும் பழமாகணும்' என்று சிரித்துக் கொண்டே பீடிகை போட்டார். சாவி மாம்பழம் சாப்பிட்டு முடித்ததும் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார். "தினமணி கதிர் மீண்டும் வெளிவருகிறதே, பார்த்தீர்களா? சர்க்குலேஷன் திருப்தியாக இல்லாததால் ஆசிரியரை மாற்றிப் பார்க்கலாமா என்று முதலாளிகள் யோசிக்கிறார்கள். உங்களைப் பற்றியும் வாஷிங்டனில் திருமணம் பற்றியும் பேச்சு வந்தது. நான் வேண்டுமானால் சாவியைப் பார்த்துப் பேசட்டுமா? என்று 202

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/220&oldid=824601" இலிருந்து மீள்விக்கப்பட்டது