பக்கம்:சாவி-85.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பி.டி.கோயங்காவிடம் கேட்டேன். சரி, பார்த்துப் பேசு’ என்றார் கோயங்கா. அதற்காகத்தான் உங்களை இப்போது அழைத்துள்ளேன். தினமணி கதிர் ஆசிரியர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேட்டார். - சாவி அவர்களால் இதற்கு சட்டென்று பதில் கூற முடியவில்லை. ஒருபக்கம், விகடன் தனக்குத் தந்த பெருமை களையும், புகழையும் அவரால் மறுக்க முடியவில்லை. அதே சமயம், எத்தனை நாள்தான் இப்படியே ஆசிரியர் குழுவில் ஒருவராகக் காலம் தள்ளுவது? ஆசிரியர் என்ற அடுத்த படிக்கு உயர்ந்தால்தானே தனக்குள்ள அனுபவத்தையும், திறமையையும் வெளிக்காட்ட முடியும்? அதுவும் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் கீழ் வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகும் அரிய வாய்ப்பு கிட்டும்போது அதை நழுவவிடாமல் பொறுப்பேற்று விற்பனையை உயர்த்திக் காட்டுவதுதானே சவால்' என்று எண்ணினார். அப்போது தினமணி கதிர் அச்சு நேர்த்தி இல்லாமல் கவர்ச்சியற்ற தோற்றத்தில் வெளியாகிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும்போதெல்லாம் இந்தப் பத்திரிகையைத் தம் வசம் ஒப்படைத்தால் மிகச்சிறப்பாகச் செய்து காட்ட முடியுமே என்று சாவி அவர்கள் நினைத்துப் பார்த்ததுண்டு. இப்போது எஸ்.வி.ஸ்வாமியின் அழைப்பு சாவியின் ஆசையை மேலும் தூண்டுவதாக இருந்தது. ஆயினும் சாவி சட்டென்று முடிவு செய்ய முடியாத நிலையில் யோசித்து பதில் சொல்கிறேன்' என்று மட்டும் கூறி விட்டு வந்தார். ஒரு வார காலம் தீர்க்கமாக யோசித்த பிறகே ஸ்வாமியை மறுபடியும் சந்தித்துச் சில நிபந்தனைகளுடன் வேலையில் சேருவதற்குச் சம்மதித்தார். சம்பளம் மாதம் ஆயிரம் ரூபாய் தரவேண்டும், இம்ப்ரிண்ட்டில் ஆசிரியர் : சாவி என்று போட வேண்டும். இந்த இரண்டும் முக்கிய நிபந்தனைகள். ஸ்வாமி இதுபற்றி 203

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/221&oldid=824603" இலிருந்து மீள்விக்கப்பட்டது