பக்கம்:சாவி-85.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. கதிர் காலம் - 2 ஒரு பத்திரிகையாளராக சாவியின் வாழ்க்கையை உயர்த்தியது ஆனந்த விகடன் என்றால், பொருளாதார ரீதியாக அவரது வாழ்க்கையை மேம்படுத்தியது தினமணி கதிர் என்றுதான் சொல்ல வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது அந்தக் காலத்தில் பெரிய தொகை. அத்துடன் ஆசிரியர் என்ற பதவி வேறு. கதிரில் பொறுப்பேற்று சில மாதங்கள்கூட ஆகவில்லை. சாவியின் பேரன் - மூத்த மகள் ஜெயந்தியின் மகன் - அருணுக்குப் பெயர் சூட்டும் விழா மாம்பலத்தில் நடைபெற்றது. கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் கிருஷ்ணசாமி அவர்கள் சாவியின் குடும்பத்துக்கு மிகவும் பழக்கமானவர். அவர் மட்டும் அல்ல, அவரது தந்தை டைரக்டர் கே.சுப்ரமணியம் காலத்தில் இருந்தே நல்ல நட்பு உண்டு. கிருஷ்ணசாமி, அவரது சகோதரி பரத நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் என்று அனைவருமே சாவி குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகி பாசம் கொண்டிருப்பவர்கள். அப்போது கிருஷ்ணசாமி தம்முடைய 'ஹெரால்ட் காரை விற்று விட முடிவு செய்திருப்பதாக சாவியிடம் சொன்னார். சாவி இதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தார். 'தினமணி கதிர் எடிட்டராகி விட்டீர்கள். இன்னமும் 207

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/225&oldid=824611" இலிருந்து மீள்விக்கப்பட்டது