பக்கம்:சாவி-85.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பஸ், ஆட்டோ என்று போய்க் கொண்டிருந்தால் எப்படி? என் காரை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கார் ஆசையை சாவியின் மனதுக்குள் விதைத்தார் கிருஷ்ணசாமி. அதெல்லாம் நம்மால் ஆகாது சாமி! அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்? என்று தயங்கிய சாவி யிடம், "அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் தவணை முறையில் தந்தால் போதும்: என்றார் கிருஷ்ணசாமி. 'பார்க்கலாம், யோசிக்கலாம்' என்று இழுத்தார் சாவி. பேரனுடைய பெயர் சூட்டு விழாவுக்காக சாவியின் வீடு கலகலப்பாய்க் களை கட்டியிருந்தது. ஹோமம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் கிருஷ்ணசாமி அங்கே போய் சாவியைப் பார்த்து "கொஞ்சம் வெளியே வருகிறீர்களா? கார் கொண்டு வந்திருக்கிறேன். ஒட்டிப் பார்த்து விட்டு வரலாம். வாங்க" என்று அழைத்தார். 'வீட்டில் விசேஷம் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது எப்படி வர முடியும்?' என்றார் சாவி. இதற்குள் திருமதி சாவி அவர்களின் காதுக்கு விஷயம் எட்டி விட, தன் கணவர் திடீரெனக் கார் வாங்க முடிவு எடுத்திருப்பது திருமதி ஜானகிக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. 'காரா? விரலுக்குத் தகுந்த வீக்கமாகத் தோன்றவில்லை. அப்புறம் உங்கள் இஷ்டம்' என்றார் திருமதி சாவி. it to அட, சும்மா வாங்கிப் போடுவோம். வண்டியைக் கொஞ்ச நாள் யூஸ் பண்ணலாம். சரிப்பட்டு வரவில்லை யென்றால் நல்ல விலைக்கு வித்துடுவோம்" என்று மனைவியைத் 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/226&oldid=824613" இலிருந்து மீள்விக்கப்பட்டது