பக்கம்:சாவி-85.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தம்முடைய சாதுர்யமான பேச்சு மூலம் ஒப்புக் கொள்ளச் செய்து விட்டார். அடுத்த சில மணி நேரத்துக்குள்ளாகவே பேரம் முடிந்து கார் சாவியும் சாவியின் கைக்கு வந்துவிட்டது. 'அன்று கார் வாங்கினேன். ஆண்டவன் கருணையால் இன்று வரை காரில்தான் போய்க் கொண்டிருக்கிறேன். இதற்குள் எத்தனையோ கார்கள் மாற்றியாகி விட்டது. அன்று முதல் இன்று வரை கார் இல்லாத ஒரு நிலையை எனக்கு ஆண்டவன் ஏற்படுத்தவில்லை' என்கிறார் சாவி, கதிர் ஆசிரியராகப் பதவி ஏற்ற பின்பு அதுநாள் வரை தன் சிந்தனையில் தேக்கி வைத்திருந்த பல்வேறு எண்ணங்களுக்கும் செயல் வடிவம் தரத் தொடங்கினார். லே-அவுட் என்கிற வடிவமைப்பில் சாவி அவர்களுக்கு எப்போதுமே ஆர்வமும் திறமையும் அதிகம். பத்திரிகையின் ஒவ்வொரு பக்கமும் பளபளவென லே-அவுட்டில் பிரகாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். ஒரு இரண்டு வரி ஜோக்கைக்கூட ஏதாவது லே-அவுட் செய்துதான் வைப்பார். எனவே தினமணி கதிரின் முகமே வேகமாக மாற ஆரம்பித்தது. 'கதிருக்குள் நுழைந்த போது எப்படி உணர்ந்தீர்கள்?" என்று சாவி அவர்களை நான் கேட்டேன். “ரொம்ப நாளா ஒட்டடை அடிக்காமல் பூட்டி வைத்திருந்த வீட்டுக்குள்ளே நுழைந்த மாதிரி உணர்ந்தேன். பத்திரிகையில் விஷயங்கள் இருந்தபோதிலும் பார்வைக்குத் தெளிவு இல்லாமல் பஞ்சாங்கம் போல் தோற்றமளித்தது. என் முழு வேகத்தையும் காட்டி தினமணி கதிரைப் பளிச்சென்று வெளிச்சம் வீசும்படிச் செய்தேன்." "இருட்டாக இருந்த அறைக்குள்ளே போய் ஜன்னல்களை 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/227&oldid=824615" இலிருந்து மீள்விக்கப்பட்டது