பக்கம்:சாவி-85.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தொடர்கதை வெளிவரப் போகிறது என்றால் அவரது புகைப் படத்தைப் பெரிய அளவில் போட்டு விளம்பரப்படுத்துவதில் சாவி மிகுந்த அக்கறை காட்டினார். உண்மைக் கதைகள், சிவப்பு விளக்குப் பகுதியை நேரில் போய்ப் பார்த்து எழுதப்பட்ட கதைகள், சிறைச்சாலைக் கதைகள் என்று புதிது புதிதாக கதிரில் இடம் பெற்றன. எழுத்தாளர்கள்வாசகர்களிடையே நேருக்கு நேர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அவர்களுக்குள் ஒரு நட்புறவை ஏற்படுத்தினார். அதுவரை அப்படிப்பட்ட முயற்சிகள் எதையும் எந்தப் பத்திரிகையும் மேற்கொண்டதில்லை. இதனாலெல்லாம் வாசகர்களிடமிருந்து கதிர் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆசிரியர் சாவி எழுத்தாளர்களை எப்படியெல்லாம் பெருமைப்படுத்தினார், ஊக்கப்படுத்தினார் என்பதை திருமதி சிவசங்கரி நினைவு கூர்கிறார்: 'சாவி சாரை முதன் முதலில் சந்தித்த நாள் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஃபர்ஸ்ட் நேஷனல் ஸிடி பாங்க்கில் நான் வேலை பார்த்து வந்த சமயம், பாங்க்கில் நுழைந்ததும் வலப்பக்கம் முதலில் என் மேஜைதான் இருக்கும். பக்கத்திலேயே வந்தவர்கள் அமர சோபாக்கள். சாவி சார் நண்பர் ஒருவருடன் வங்கிக்கு வந்திருந்தார். என் முதல் நாலைந்து சிறுகதைகள் வெளியாகி இருந்த நாட்கள் அவை என்பதால் வந்தவர் இன்னார் என்று புரிந்துவிட எனக்குள் ஏக பரபரப்பு; எழுத்தாளர் என்ற ரீதியில் அவருடன் பேச ஆசை எழுந்து சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். 'தெரியுமே! ஆடிட்டர் சூரி டாட்டர்தானே நீங்கள்? உங்கள் சித்தப்பா நடேசன், அவர் தம்பி கல்கி சாமா, எனக்கு நெருங்கின நண்பர்கள். கதையெல்லாம் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது! வெரிகுட்... கதிருக்கும் எழுதுங்கள்." 211

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/229&oldid=824619" இலிருந்து மீள்விக்கப்பட்டது