பக்கம்:சாவி-85.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கதை?; எத்தனை வாரங்கள்? முழுக்க எழுதிக் கொடுக்கிறீர்களா?" - என்று ஏதாவது கேள்வி? ம்ஹல்ம் - இதுநாள் வரை இல்லை. "தலைப்பு என்ன சிவசங்கரி?" என்று மட்டும் கேட்பார். சொல்வேன். ஆறு வாரங்கள், எட்டு வாரங்களுக்குத் தடபுடலாய் விளம்பரப்படுத்துவார். "கதை என்ன என்று சொல்லட்டுமா சார்?' என்றால், சிரிப்பார். "எதற்கு சிவசங்கரி? உங்கள் பேரில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு விளம்பரம் கொடுப்பதுடனும், சுதந்திரம் அளிப்பதுடனும் என் பொறுப்பு தீர்ந்து விடுகிறது. உங்கள் பேர் கெடாத வண்ணம் எழுதுவதும், வாசகர்கள் அபிமானத்தைப் பெறுவதும், உங்கள் பேரில் நான் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்க்காததும் உங்கள் கையில்தானே இருக்கின்றன. அதெல்லாம் உங்கள் பொறுப்பு அல்லவா?" இதை நிரூபிக்கும் தினுசில் சாவி அவர்கள் என் எழுத்துக்களைப் படித்துக் கூடப் பார்க்காமல் கம்போஸிங்கிற்கு அனுப்பியது உண்டு. அது என்ன அசுர நம்பிக்கை! ஒவ்வொரு முறை பேனாவை எடுத்தபோதும், ஏன், இன்றைக்கு எடுக்கும் போதும், சாவி சார் சொன்ன வார்த்தைகளும், வைத்திருந்த நம்பிக்கையும், அடிவயிற்றில் சில்லிப்பை உண்டாக்கி, பரீட்சைக்கு உட்கார்ந்திருக்கும் மாணவியாய் என்னைப் பொறுப்புடன் செயல்படுத்துகின்றன என்றால், அதுதான் என்னுள் சாவி சார் போட்ட அஸ்திவாரம். புதுசு புதுசாய் ஏதாவது செய்வதில் சாவி சாருக்கு நிகர் சாவி சார்தான். 213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/231&oldid=824625" இலிருந்து மீள்விக்கப்பட்டது