பக்கம்:சாவி-85.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எழுத்தாளர்கள் இன்றைக்கு ஒரு வித க்ளாமருடன் வாழ்கிறார்கள் என்றால் அத்தகைய வாய்ப்பை உண்டாக்கியவர்களில் சாவி சார் முக்கியமானவர். உதாரணத்துக்கு ஒன்றாக, இவர்களைச் சந்தியுங்கள் - என்ற நிகழ்ச்சியைச் சொல்லலாம். சிவசங்கரி, சுஜாதா போன்ற எழுத்தாளர்களையும் ஜெயராஜ் போன்ற ஒவியர்களையும் பல்லாயிரக்கான வாசகர்களையும் பத்து வருடங்களுக்கு முன்பே நேருக்கு நேர் சந்திக்க வைத்து, கேள்விகள் கேட்டு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளச் செய்தது, ஒரு அலாதி அனுபவம், திருப்புமுனைதான். எழுத்தாளரின் ஆர்வமும், கண்ணோட்டமும் அலை பாய்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துச் சொல்பவர் சாவி சார். அமெரிக்க நாடுகளுக்கு இரண்டாவது முறை சென்று வந்தபின் 'எப்போது பயணக் கதை தொடங்கப் போகிறீர்கள்' என்று அவர் கேட்க, 'திரும்பவுமா? அதான் ஒரு முறை எழுதியாகி விட்டதே' என்று நான் வியந்தேன். "எழுத்தாளரின் கண்களுக்குப் புதுப்புதுக் கோணங்கள் தெரிந்து கொண்டே இருக்கும்; சென்ற முறை காணாத அமெரிக்காவை இந்தப் பயணத்தில் கண்டிப்பாய் உணர்ந்திருப் பீர்கள், எழுதிப் பாருங்கள்' என்று தன்னம்பிக்கையுடன் அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. என்னையும் அறியாமல் அமெரிக்காவைப் புதிய கண்ணோட்டத்தில் என்னுள் பதித்துக் கொண்டிருந்தது, பேனாவும் கையுமாய் உட்கார்ந்த நிமிஷம் புரிந்தது.' கதிரின் விற்பனை அதிகரித்துக் கொண்டே போனபோது, சாவி அவர்கள் கதிர் ஆசிரியராக வருவதற்கு ஆரம்பத்தில் முட்டுக் கட்டை போட்டவர்களெல்லாம் மூக்கில் விரல் 214

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/232&oldid=824628" இலிருந்து மீள்விக்கப்பட்டது