பக்கம்:சாவி-85.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் வைக்கும் அளவுக்கு அதிரடி மாற்றங்களைப் பத்திரிகையில் புகுத்தினார் சாவி. அண்ணாவின் கதை' என்று நவீனன் எழுதிய கட்டுரைத் தொடரை சாவி கதிரில் வெளியிட்டார். தேசிய நீரோட்டத்தில் கலந்திருந்த தினமணி நிர்வாகிகளும் ஆசிரியர் குழுவும் இந்தக் கட்டுரைத் தொடர் வெளியாவதை விரும்பாமல் மென்று விழுங்கிக் கொண்டிருந்தபோதிலும் சாவி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தொடர் முடிந்த பின்பு அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து வெளியிட சாவி பெருமுயற்சி எடுத்துக் கொண்டதுடன் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தலைமையில் நூல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும் என்ற தம் எண்ணத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டார். கலைஞர் அவர்களுடைய பேச்சிலும் எழுத்திலும் சாவிக்குத் தனி ஆர்வம் இருந்தது. 'அண்ணாவின் கதை புத்தக வெளியீட்டு விழாவுக்காக எக்ஸ்பிரஸ் காம்பவுண்டுக்குள் தனி மேடை அமைக்கப்பட்டது. திரு. ஏ. என்.சிவராமன், ராமநாத் கோயங்கா, பகவான்தாஸ் கோயங்கா, அப்போதைய தலைமை நீதிபதி வீராசாமி, சாவி ஆகியோர் முதல்வர் கலைஞருடன் அமர்ந்திருந்த காட்சி ஓர் அபூர்வக் காட்சியாக இருந்தது. எக்ஸ்பிரஸ் கோட்டைக்குள் தி.மு.க. வா !” என்று பலர் மூக்கில் விரல் வைத்து அதிசயித்தார்கள். விழாத் தொடக்கத்தில் திருமதி எம்.எல்.வசந்தகுமாரி இறை வணக்கம் பாட, சாவி எழுந்து வரவேற்புரை நிகழ்த்தினார். பேச்சின் நடுவே, நான்கூட D.M.Kதான் என்று சொல்லிவிட்டுச் சில விநாடிகள் இடைவெளி தந்து "ஆமாம். தினமணி கதிர் - DNA MAN RADIR - டி.எம்.கே." என்று சொன்னதும் 215

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/233&oldid=824630" இலிருந்து மீள்விக்கப்பட்டது