பக்கம்:சாவி-85.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. காமராஜ் - சோ சந்திப்பு தினமணி கதிரில் அவர் புகுத்திய புதுமைகள் ஏராளம். என்னென்ன புதுமைகள் செய்வது அவற்றை எப்படிச் செய்வது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டுமே! அதற்காக அடிக்கடி எழுத்தாளர்களை வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று அவர்களோடு ஆலோசனை நடத்தினார். ஒரு பிக்னிக் போலவும் இருக்க வேண்டும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பது சாவி அவர்களின் நோக்கம். ஒருமுறை மாமல்லபுரம் கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள டி.வி.எஸ். பண்ணை வீட்டில் ஒரு புதுமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபலமான நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் சிறுவயது கமலஹாசனும் ஒருவர். அவர் நடிப்புத் துறையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்த நேரம். நடிக, நடிகையரை ஓர் இடத்துக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே கலந்துரையாடல், அரட்டை, நேருக்கு நேர் போன்ற - அதுவரையில் எந்தப் பத்திரிகையிலும் முயன்று பார்க்காத - புதுமை நிகழ்ச்சிகளை நடத்தி அதையே ஒரு சுவையான கட்டுரையாகவும் எழுதி புகைப்படங்களுடன் வெளியிட்டார். - இடைக்கழிநாடு என்ற இடத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மனோரமா, சோ, தேங்காய் சீனிவாசன் போன்ற 217

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/235&oldid=824632" இலிருந்து மீள்விக்கப்பட்டது