பக்கம்:சாவி-85.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கித் தந்தார்கள். ஒரு நகைச்சுவை சம்பவம் பற்றி சாவி சொல்கிறார்: 'ஒரு மரத்தின் நிழலில் தேங்காய் சீனிவாசன், சோ எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது சூரியன் திசை மாறிவிட அங்கே வெயில் தேங்காய் சீனிவாசன் மீது சூடாக அடிக்கத் தொடங்கியது. தேங்கா தள்ளி உட்கார். இல்லேன்னா வெயில்ல கொப்பரை ஆயிடுவே! என்று சோ ஜோக்கடிக்க எல்லோரும் சிரித்து விட்டோம்.' அதேபோல பூரீப்ரியா, ஏ.சகுந்தலா போன்ற நடிகைகளை அழைத்து எக்ஸ்பிரஸ் எஸ்டேட் ஹாலில் உறியடி விழா ஒன்று நடத்தினார். இப்படி எதைச் செய்தாலும் அதைப் பத்திரிகைக் கோணத்தில் பார்த்துச் செய்வது சாவிக்குக் கைவந்த கலை. வி.ஜி.பி. தங்கக் கடற்கரை வளாகம் சாவி அவர்களுக்கு மிகவும் பிடித்த இடம். அங்கே பல நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். அதுவும் வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ணாச்சிக்கு சாவி என்றால் மிகவும் பிரியம். திடீர் என்று சாவி குடும்பத்தினரை கோல்டன் பீச்சுக்கு அழைப்பார். ஏன்? என்று கேட்டால் 'அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆக்சு என்பார். திருமதி சாவி அவர்களின் சமையல் வண்ணம் பிரபலமானது. எது செய்தாலும் அதில் சுவை மிளிரும். வி.ஜி.பி. அழைத்ததும் உடனே பல ரக சாத வகைகளைத் (சித்ரான்னம்) தயார் செய்து கொண்டு, தம் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு கோல்டன் பீச்சுக்குப் போய் விடுவார் சாவி. பன்னீர்தாஸும் தம் மனைவி மக்களுடன் அங்கே வந்து விடுவார். இரு குடும்பத்தினரும் சேர்ந்து விருந்துண்டு மகிழ்வார்கள். தங்கள் கதை வெளியாவது கண்டு மகிழ்ச்சி அடையும் எழுத்தாளர்கள் அதே கதை வண்ணச் சித்திரங்களோடு வெளியானால் வாசகர்கள் மட்டுமல்ல, அந்தக் கதாசிரியர்களும் 218

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/236&oldid=824634" இலிருந்து மீள்விக்கப்பட்டது