பக்கம்:சாவி-85.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பரிமாறினார் திருமதி சாவி, அன்று காமராஜருடன் சேர்ந்து உண்ணவும், பேசிக் கொண்டிருக்கவும் துணையாக யாரை அழைக்கலாம் என்று யோசித்த சாவிக்கு சோ நினைவுக்கு வந்தார். உடனே காமராஜருடன் தொடர்பு கொண்டு சோவையும் இன்று இரவு அழைக்கட்டுமா? என்று கேட்டபோது, வரட்டுமே, வரட்டும்' என்றார் காமராஜர். அப்போது சாவி அசோக் நகரில் குடியிருந்தார். அந்தச் சின்ன வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் ஏ.ஸி. செய்யப்பட்டிருந்தது. சாப்பிட்டு முடித்ததும் காமராஜ், சாவி, சோ மூன்று பேரும் அந்தச் சின்ன அறைக்குள் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல் தலைவர்கள் பற்றி, மத்திய மாநில அரசு பற்றி, பொருளாதாரம், பண வீக்கம், ரூபாயின் மதிப்பு குறைந்தது பற்றி எல்லாம் வெகு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இரவு மணி ஒன்றைத் தாண்டி விட்டது. மூவருக்குமே தூக்கம் கண்ணைச் சுழற்றியது. 'சரி புறப்படறேன் என்று சொல்லி காமராஜ் விடை பெற்றுப் புறப்படும்போது அம்மா எங்கே?' என்று கேட்டார். அம்மா, நடு ஹாலில் தரையிலே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். சாவி தம் மனைவியை எழுப்ப முற்பட்டபோது அவங்களை எழுப்பாதீங்க வேண்டாம்; நீங்க சொல்லிருங்க” என்று கரிசனத்துடன் கூறி விட்டுக் காரில் போய் ஏறிக் கொண்டார் காமராஜர். காமராஜ் தம் வீட்டுக்கு வந்து விட்டுப்போன அந்த நாள் சாவியின் இதயத்தில் கல்வெட்டாய்ப் பதிந்து போன நாள். 221

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/239&oldid=824642" இலிருந்து மீள்விக்கப்பட்டது