பக்கம்:சாவி-85.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. கருகிய மொட்டு சத்ய சபாவின் சார்பில் நடத்தப்பட்ட கலை விழாவில் இரு வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. வாரத்தில் ஐந்து நாட்கள் உபந்நியாசம், இரண்டு நாட்கள் எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரின் சேவா ஸ்டேஜ் நாடகம் என்று நாற்பது நாட்கள் தொடர்ந்து நடந்தன. அந்த நாற்பது நாட்களுக்கிடையில் ஒரே ஒரு நாள் மட்டும் புரிசை நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து நடந்தது. புரிசை கிராமம் சாவி அவர்களின் கிராமத்துக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ளது. நடேசத் தம்பிரான் சிறந்த தெருக்கூத்து கலைஞர் என்பதால் அவரை சென்னை நகரில் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் அந்தக் கூத்துக்கு சத்ய சபா சார்பில் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய முதல்வர் எம்.பக்தவத்சலம் அவர்கள் தலைமை தாங்கினார். தெருக்கூத்துக்கு ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் வைத்ததில் அறுநூறு ரூபாய் வசூலாயிற்று. நடேசத் தம்பிரானுக்கு ஒரு ஆசை. தன்னுடைய தெருக் கூத்து நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும். அவருடைய வாழ்த்தையும் பாராட்டுதலையும் பெற வேண்டும் என்பது தம்பிரானின் ஜன்மசாபல்யமாக இருந்தது. எம்.ஜி.ஆரை அழைத்து வர எப்படியாவது ஏற்பாடு செய்யும்படி சாவியிடம் அவர் மன்றாடிக் கொண்டிருந்தார். அந்தப் புகழ் பெற்ற தெருக்கூத்துக் கலைஞரின் 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/240&oldid=824646" இலிருந்து மீள்விக்கப்பட்டது