பக்கம்:சாவி-85.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் விருப்பத்தை நிறைவேற்றும் முயற்சியாக சாவி எம்.ஜி.ஆரைப் போய்ப் பார்த்தார். படப்பிடிப்பு வேலைகளில் மிகவும் 'பிஸியாக இருந்ததால் தன் இயலாமையைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அப்போதே தமது நன்கொடையாக முன்னூறு ரூபாய் தந்து அதற்கான டிக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் ஒருமுறை எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்கள் சங்கக் கூட்டமொன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது அவரது விருப்பத்திற்கிணங்கி அக்கூட்டத்தில் சாவியும் கலந்து கொண்டு பேசினார். என்றாலும் இரண்டு பேருக்கும் இடையே கனிந்த நட்பு ஏற்பட்டு விடவில்லை. தினமணி கதிரின் விற்பனையை உயர்த்த என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனையில் இருந்த சாவி அவர்களுக்கு எம்.ஜி.ஆருடன் தனக்கிருந்த பரிச்சயத்தின் அடிப்படையில் ஒரு யோசனை உதித்தது. சித்திரத் தொடர்கதை ஒன்றைக் கதிரில் வெளியிட்டு அந்தக் கதையின் கதாநாயகனாக எம்.ஜி.ஆரின் முகத்தைப் பயன்படுத்தினால் கதிர் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று யோசித்தார். எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து அதற்கான அனுமதியைப் பெற விரும்பி சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்றார். கழுத்தில் குண்டு பாய்ந்து உயிருக்கே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று எம்.ஜி.ஆர். பிழைத்து எழுந்திருந்த நேரம் அது. நீண்ட ஒய்வுக்குப் பின்னர் அப்போதுதான் அவர் நடிக்கத் தொடங்கி இருந்தார். சாவி அவரைப் பார்க்கச் சென்றது அப்போதுதான். சாவி சொல்கிறார்: "எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் படுத்திருந்தபோது நான் ஆஸ்பத்திரிக்குப் போய் அவரைப் பார்க்கவில்லை. அதை அவரிடம் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது. அதனால், 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/241&oldid=824648" இலிருந்து மீள்விக்கப்பட்டது