பக்கம்:சாவி-85.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 'மருத்துவமனைக்கு உங்களைப் பார்க்க வந்திருந்தேன். அனுமதி கிடைக்கவில்லை. பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்து மட்டும் போட்டு விட்டு வந்தேன்' என்று துணிந்து ஒரு பொய் சொல்வி விட்டேன். உடனே எம்.ஜி.ஆர்., ஆமாம், விஸிட்டர்ஸ் புக்கில் உங்க கையெழுத்தைப் பார்த்தேன் என்று சொன்னதைக் கேட்டு நான் மனதிற்குள்ளாகவே அவர் சொன்ன பொய்யை நினைத்து சிரித்துக் கொண்டேன்." பின்னர், தனது சித்திரக்கதை யோசனையை எம்.ஜி.ஆரிடம் சாவி விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரது புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சற்று நேரம் யோசித்த எம்.ஜி.ஆர். தமது சமநீதி: பத்திரிகையில் வெளியிட அதைப்போலவே ஒரு ஐடியா வைத்திருப்பதாகச் சொல்லி அனுமதி வழங்க மறுத்து விட்டார். அச்சமயம் எம்.ஜி.ஆர். உச்சரிப்பு தெளிவாக இல்லாததால் அவர் என்ன சொன்னார் என்பதை அருகிலிருந்த அவரது உதவியாளர் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டார் சாவி, இந்த உரையாடலுக்கு முன்பாக, சாவியை எம்.ஜி.ஆர். தமது தனி அறைக்கு அழைத்துப் போனார். அங்கே வைக்கப் பட்டிருந்த தமது அன்னை சத்யாவின் படத்தைச் சுட்டிக்காட்டி, 'இன்று என் தாயாரின் திதி' என்று கூறிவிட்டு உதவியாளரை அழைத்து அந்தப் படத்துக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பாயச டம்ளரை எடுத்து சாவியிடம் தரச் சொன்னார். 'பாயசம் சாப்பிடுங்கள். ஒவ்வொரு வருடமும் இப்படி என் தாயாரின் நினைவு நாளின்போது அம்மாவுக்குப் படைக்கும் பாயசத்தை எனக்கு ரொம்பவும் பிடித்த ஒருவருக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வது வழக்கம். இன்று, பாயசம் உங்களுக்குத்தான்" என்றார். சாவி அவர்கள் பாயசத்தைச் சாப்பிட்டார். எனினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/242&oldid=824650" இலிருந்து மீள்விக்கப்பட்டது