பக்கம்:சாவி-85.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 "இந்தக் கேள்வி-பதில் பகுதியை நான் சொல்கிறவரை நீங்கள் நிறுத்தக்கூடாது. நானாக எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன். ஆசிரியருக்கான அந்த உரிமையைத் தாங்கள் மறுக்கக் கூடாது" என்று சாவி சற்று அழுத்தமாகவே சொன்னார். எம்.ஜி.ஆர். அதற்கும் சரி என்று ஒப்புக் கொண்டார். எம்.ஜி.ஆர். பதில்கள் என்று தினமணி கதிரில் வெளியான விளம்பரத்தைப் பார்த்ததும் வாசகர்கள் எழுதி அனுப்பிய கேள்விகள் குதிர்களாய்க் குவிந்தன. அவை வாரா வாரம் சாக்குப் பைகளில் மூட்டைகளாகக் கட்டப்பட்டு எம்.ஜி.ஆருக்குப் போய்க் கொண்டிருந்தன. எம்.ஜி.ஆரிடமிருந்து பதில்களை வாங்கி வந்து தருகின்ற பொறுப்பை வித்வான் லட்சுமணன் ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து வாரங்கள் எம்.ஜி.ஆர். பதில்கள் தொடர்ந்து வெளியாயின. - அச்சமயத்தில் சோ அவர்கள் தம்முடைய துக்ளக் இதழில் எம்.ஜி.ஆரைக் கேலி செய்து அவருக்கே உரிய நகைச்சுவையுடன் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு வாரம், எம்.ஜி.ஆர். தான் எழுதியனுப்பிய பதில்களில் 'சோ'வைக் கடுமையாகத் தாக்கியிருந்தார். அதுவும் ஒரே வாரத்தில் ஐந்தாறு பதில்களில் தாக்கியிருந்தார். 'சோ'வைத் தாக்கி எழுதுவதற்கு தினமணி கதிர் கேள்வி-பதில் பகுதியை எம்.ஜி.ஆர். பயன்படுத்திக் கொள்வதை சாவி விரும்பவில்லை. அதனால் அந்தப் பதில்களை அவர் வெளியிடவில்லை. ஆசிரியர் என்ற முறையில் பத்திரிகை தர்மத்தின் அடிப்படையில் அம்மாதிரியான பதில்களை வெளியிட சாவி விரும்பாததே காரணம். இது எம்.ஜி.ஆருக்குக் கோபத்தை உண்டு பண்ணும் என்பதும் சாவிக்குத் தெரியும். வித்வான் லட்சுமணனோ பதறிப் போய் 'என்ன இப்படிப் பண்ணி விட்டீர்களே சோ பற்றி எம்.ஜி.ஆர். எழுதியிருந்த பதில் களையெல்லாம் போடவில்லையே? தெரிந்தால் எம்.ஜி.ஆர். 226

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/244&oldid=824655" இலிருந்து மீள்விக்கப்பட்டது