பக்கம்:சாவி-85.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ரொம்பக் கோபப்படுவாரே, இனிமேல் பதில் எழுத மாட்டேன் என்று சொன்னாலும் சொல்லி விடுவாரே என்றார். "அவர் என்ன சொல்வது? நான் சொல்கிறேன். எம்.ஜி.ஆர். பதில்கள் பகுதியை இதோ இந்த நிமிடமே நிறுத்தியாச்சு! மிச்சமிருக்கும் இந்த மூட்டைகளையெல்லாம் இப்போதே எடுத்துப் போயிடுங்க" என்று முடிவாகச் சொல்லி அனுப்பி விட்டார் சாவி, இதன் விளைவாக எம்.ஜி.ஆருக்கும் சாவிக்கும் இடையே மொட்டு விட்டிருந்த நட்பு ஒரே நாளில் கருகிப் போயிற்று என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நட்பு வேறு-பத்திரிகை வேறு என்பது எப்போதுமே சாவியின் சித்தாந்தம். தம் பத்திரிகையில் எந்த மேட்டரையும் அவர் நட்புக்காகப் பிரசுரித்ததே இல்லை. அதேபோல ஒரு மேட்டர் சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்தால் அந்த மேட்டரைத் தருபவர் நட்புறவில் இல்லை என்பதற்காக மறுத்ததுமில்லை. எந்த எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டாரோ அதே எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராகப் பதவிக்கு வந்ததும், அவரைப் பேட்டி கண்டு சாவி இதழில் தோட்டத்திலிருந்து கோட்டம் வரை என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே எழுதி வெளியிட்டார் சாவி. எம்.ஜி.ஆரிடம் அவருக்கு இருந்த பகை அதற்குக் குறுக்கே வரவில்லை. 227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/245&oldid=824657" இலிருந்து மீள்விக்கப்பட்டது