பக்கம்:சாவி-85.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இருந்தது. "காரணம், தினமணி கதிர் ஆசிரியர் நாற்காலியில் அவர் என்னைப் பார்க்கும்போது ஒரு காலத்தில் நாம் அமர்ந்திருந்த இடம் இது என்ற எண்ணம் துமிலனை நிச்சயம் சங்கடப்படுத்தும். அந்தச் சங்கடத்தை அவருக்குத் தர வேண்டாமே என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னைப் பார்க்க அவர் உள்ளே வந்து விட்ட பிறகு என்ன செய்வது?" என்று சாவி அத்தருணத்தில் வேதனைப்பட்டதாகச் சொல்கிறார். -- இனிமேல் அவர் வந்தால் என்னைப் பார்க்க உள்ளே அனுப்பாதீர்கள். நீங்களே கட்டுரைகளை வாங்கி வைத்துக் கொண்டு அவரை நைஸாக அனுப்பி விடுங்கள் என்று உதவி ஆசிரியர்களுக்குச் சொல்லி வைத்திருந்தார் சாவி. துமிலன் அடுத்த முறை சாவியைப் பார்க்க வந்தபோது உதவி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து விட்டார்கள். சாவி இப்படி நல்ல எண்ணத்தில் சொல்லியிருந்ததை துமிலன் தவறாகப் புரிந்து கொண்டு தன்னை உள்ளே வரக்கூட அனுமதிக்காமல் சாவி அவமதித்து விட்டதாக எண்ணி வெகுண்டார். வீட்டுக்குப் போனதும் சுமார் நான்கு பக்கங்களில் ஒரு நீளமான கடிதம் எழுதி சாவிக்கு அனுப்பினார். மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி மிகவும் காரசாரமாக எழுதப்பட்டிருந்த கடிதம் அது. நான் ரொம்பவும் மனம் நொந்து போனேன். என்னை அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று நினைத்து நினைத்து வேதனைப் பட்டேன் என்று அக்கடிதம் பற்றி சாவி இப்போதும் சொல்லி வருத்தப்படுகிறார். இது பற்றித் துமிலனுக்கு விளக்கமாக ஒரு பதில் கடிதம் எழுதி அனுப்பினார் சாவி. ஆனால் துமிலன் அந்த விளக்கத்தைப் பெரிதாக எடுத்துக் கொண்டது மாதிரியோ, ஏற்றுக் கொண்டது மாதிரியோ காட்டிக் கொள்ளவில்லை. அப்புறம் இரண்டாண்டுகள் கழித்து எழுத்தாளர் பி.வி.ஆர். 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/248&oldid=824663" இலிருந்து மீள்விக்கப்பட்டது