பக்கம்:சாவி-85.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'பாலிடிக்ஸ் தெரியும். பாலிடின்னா தெரியலை என்று இழுத்தாற்போல் சொன்னார் சாவி, 'மக்களுக்காகப் பொதுவாகச் செய்யப்படும் நல்ல காரியங்களை பாலிடின்னு சொல்வா. பாலிடிங்கற தலைப்பில் வாரா வாரம் கதிர்ல நீ ரிலிஜியன் எழுது என்றார். தாம் நடத்தும் பத்திரிகைகளில் ரிலிஜியன், ஆன்மிகம் பற்றியெல்லாம் எழுதுவது சாவிக்கு எப்போதுமே உடன்பாடில்லை. எனவே “நான் என் பத்திரிகையில் ரிலிஜியன் எழுதுவதற்கில்லை" என்று சற்றும் தயக்கம் காட்டாமல் பளிச்சென்று பதில் கூறி விட்டார் சாவி. சுவாமிகள் சாந்தமாக “ஏன் அப்படிச் சொல்றே?" என்றார். "நான் ஆசிரியர் வேலையை ஒப்புக் கொண்டபோது கதிர் பத்திரிகையின் விற்பனையை லட்சம் பிரதிகளாக்கிக் காட்றேன்னு கோயங்காவிடம் சேலஞ்ச் பண்ணியிருக்கேன். அதுக்கு இடைஞ்சலா இருக்கிற எதையும் நான் செய்யப் போவதில்லை." 'ரிலிஜியன் எழுதினா சர்க்குலேஷன் ஏறாதோ? பெரியவர் விடுவதாக இல்லை. "ஏறாதுன்னு நான் முழுமையா நம்பறேன்." "எப்படிச் சொல்றே நீ?" 'இப்ப குமுதம் ஐந்து லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. அதில் அவர்கள் ரிலிஜியன் பற்றி எழுதறதில்லே. ரிலிஜியன் பற்றி எழுதற பத்திரிகை எதுக்குமே சர்க்குலேஷன் அதிகம் இல்லை." "நான் சொல்றேன். நீ எழுது. நான் பூரணமா ஆசீர்வாதம் பண்றேன். நன்னா வரும், எழுது” என்றார் பெரியவர். சாவி அவர்களுக்கு இக்கட்டான நிலை. தன் கொள்கையை 233

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/251&oldid=824671" இலிருந்து மீள்விக்கப்பட்டது