பக்கம்:சாவி-85.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பின்னால் காரைத் துரத்திக் கொண்டு வேகமாக ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அந்த சைக்கிளில் துரத்தி வந்தவர் "பெரியவா உங்களை அழைச்சிண்டு வரச் சொன்னா என்றார். ஏன் ? எதற்கு? என்று ஒன்றும் புரியாமல் மூவரும் திரும்பிப் போய் பெரியவர் முன் நின்றார்கள். "ஆமாம். ரிலிஜியன் எழுதினா பத்திரிகை விற்காதுன்னு சொல்றயே, மாம்பலம் பஸ் டெர்மினஸ் பக்கத்தில பிள்ளையார் சிலை ஒன்று திடீர்னு பூமிக்குள்ளேருந்து கிளம்பி வந்ததே. அதைப் பத்தி தினமணி பேப்பர்ல நியூஸ் போட்டப்போ ஏழாயிரம் காப்பி அதிகமாச்சாமே" என்றார் சுவாமிகள். "அது ரிலிஜியன் இல்லை. சென்ஸேஷன். அடுத்து என்ன ஆகுமோங்கற சஸ்பென்ஸ் சர்க்குலேஷன் அதிகமானதுக்கு அதுதான் காரணம்” என்றார் சாவி. சுவாமிகள் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. 'ஒகோ, நீ அப்படி நினைக்கிறயோ?" என்று மட்டும் சொல்லிவிட்டு வந்தவர்களைப் பார்த்து சரி, நீங்க போகலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். தன் மனதுக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்யக்கூடாது என்கிற தீவிரம் சாவிக்கு எப்போதுமே உண்டு. அவர் பெரிதும் மதித்துப் போற்றிப் பூஜித்த காஞ்சி பரமாச்சாரியார் முன்பும் தம் கருத்தை வெளியிடத் தயங்கிய தில்லை. இதில் அதிசயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சிக்குப் பின் கதிர் ஸர்க்குலேஷன் ஏறவே இல்லை! 235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/253&oldid=824675" இலிருந்து மீள்விக்கப்பட்டது