பக்கம்:சாவி-85.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. இரட்டை நாயனம் இன்று தமிழகத்தில் தலைசிறந்து விளங்கும் பத்திரிகை ஒவியர்களில் பெரும்பாலோர் சாவி அவர்களுடன் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் இவர் ஊக்கம் தந்திருப்பார். அத்தனை ஒவியர்கள் மத்தியிலும் கோபுலு என்றால் சாவி அவர்களின் முகம் மலரும். காரணம் நட்பு ரீதியாக இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட நாற்பத்து நான்கு ஆண்டு காலமாக அண்ணன் - தம்பி போல் பாசத்துடன் பழகி வருகிறார்கள். 'வாஷிங்டனில் திருமணம்', 'விசிறி வாழை', 'கேரக்டர், 'இங்கே போயிருக்கிறீர்களா?', 'திருக்குறள் கதைகள்', 'வழிப் போக்கன், வேதவித்து', 'கோமகனின் காதல்', 'ஊரார்', 'வடம் பிடிக்க வாங்க', 'உலகம் சுற்றிய மூவர் என்று சாவியின் படைப்புகள் அனைத்துக்குமே சித்திரம் வரைந்தவர் கோபுலுதான். இருவருமே பத்திரிகைத் துறையில் இரட்டை நாயனக்காரர்கள் போல் சுருதி சுத்தமாக இணைந்து வாழ்ந்தார்கள். "கடல் என்றால் அலைகள் நினைவுக்கு வருவதுபோல, கோயில் என்றால் கோபுரம் நினைவுக்கு வருவதுபோல, திருவாவடுதுறை ராஜரத்தினம் என்றால் தோடி ஞாபகத்திற்கு வருவதுபோல, சாவி என்று என் பெயரைச் சொன்னால் கூடவே கோபுலு என்ற பெயரும் நினைவில் வந்து நிற்கும்' என்கிறார் சாவி. 236

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/254&oldid=824677" இலிருந்து மீள்விக்கப்பட்டது