பக்கம்:சாவி-85.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. கலைஞருடன் கனிந்த நட்பு கலைஞருக்கும் சாவிக்கும் இடையே நிலவி வரும் நீண்ட கால நட்பு அனைவரும் அறிந்த ஒன்று. கலைஞருடன் அறிமுகமாகும் முன்பாகவே அவரது படைப்புகள் சாவிக்கு அறிமுகமாகி இருந்தன. கலைஞரின் அழகுத் தமிழ் சாவியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. முரசொலியின் தீவிர வாசகரான சாவி அடிக்கடி சொல்வதுண்டு: 'முரசொலியைப் படிக்கும்போது கலைஞர் பேசுவதைக் கேட்பது போல இருக்கும். கலைஞரின் சொற்பொழிவைக் கேட்கும்போது முரசொலியைப் படிப்பது போன்று இருக்கும். பல கூட்டங்களிலும் அவர் இதனைச் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். திருச்சி தி.மு.க. பிரமுகர் திரு. நாகசுந்தரம் அவர்கள்தான் சாவியை கலைஞருக்கு முதன் முதல் அறிமுகப்படுத்தி வைத்தவர். அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் தமிழக சுற்றுப்பயணம் போகும்போதெல்லாம் அநேகமாய் சாவியும் அவரோடு பயணம் செய்துவிட்டு வந்து, தினமணி கதிரில் கட்டுரைகள் எழுதுவது வழக்கம். வயது முதிர்ச்சி காரணமாக சாவியால் அந்தப் பழக்கத்தை இப்போது தொடர முடியவில்லை. சாவி எப்போதுமே எதையும் ஒரு பக்கச் சார்புடன் செய்து கொண்டிருப்பதை விரும்புவதில்லை. எதையும் சமநோக்கில் பார்த்துச் செய்ய வேண்டும் என்பார். அதிலும் குறிப்பாக ஒரு 239

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/257&oldid=824683" இலிருந்து மீள்விக்கப்பட்டது