பக்கம்:சாவி-85.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'கூவுகிற கோட்டான் கூவட்டும்; இந்தக் குயிலுக்கு என்ன வந்தது கேடு? என்று தலைப்பிட்டு முரசொலியில் ஒரு நீண்ட கட்டுரை எழுதி சாவியை விமர்சித்திருந்தார். சாவி இதைச் சற்றும் எதிர்பாராததால் அந்தக் கட்டுரையின் வேகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தம்முடைய தூயநட்பையும் உண்மையான அபிமானத்தையும் கலைஞர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்று ரொம்பவும் வேதனைப்பட்டார். முரசொலியைப் படித்துப் பார்த்த சாவி மறுநாளே கலைஞர் அவர்களை அவர் இல்லத்தில் போய்ப் பார்த்து தன் நிலையைத் தெளிவாக விளக்கிக் கூறினார். 'நான் அவர் வீட்டுக்குப் போனபோது கலைஞர் தம் கோபத்தை சற்றும் வெளிக்காட்டாமல் எப்போதும் போல் சாதாரணமாகத்தான் பேசினார். நான் ஏன் அந்தத் தலையங்கம் எழுதினேன் என்பதையும் அவரிடம் எனக்குள்ள ஆழ்ந்த அன்பையும் மனம் திறந்து பேசினேன். ஆனாலும் அவர் முழுமையாகச் சமாதானம் அடைந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. கடைசியில் விடை பெற்றுப் புறப்படும்போது உங்கள் முரசொலி கட்டுரையில் என்னைக் கடுமையாக விமரிசனம் செய்திருந்தாலும் என்னைப் பொறுத்தவரை நான் என்றுமே உங்கள் நண்பன்தான். உங்களிடமுள்ள அன்பு என்றுமே மாறாது. உங்கள் இனிக்கும் தமிழில்தான் என்னைக் குட்டி இருக்கிறீர்கள். பரவாயில்லை. மோதிரக் கையால் குட்டுப் பட்டதாகவே எண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். சாவி - கலைஞர் நட்புச் சங்கிலி இதனால் அறுந்து போய்விடவில்லை. நட்பு மேலும் உறுதிப்பட்டது. நாளடைவில் 241

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/259&oldid=824687" இலிருந்து மீள்விக்கப்பட்டது