பக்கம்:சாவி-85.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கலைஞரின் மிக நெருங்கிய, அதே சமயம் மிகச் சுருங்கிய நட்பு வட்டத்துக்குள் சாவியும் ஒருவரானார். அப்போதெல்லாம், மாலை வேளைகளில் சென்னை மெரீனா கடற்கரையில் அகில இந்திய வானொலி கட்டிடத்திற்கு எதிரே கலங்கரை விளக்கத்துக்கு அருகில் கலைஞரும் சக அமைச்சர்களும், நண்பர்களும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். இரண்டொரு சமயங்களில் சாவியும் அந்த வட்டத்தில் கலந்து கொண்டதுண்டு. சாவி அவர்களின் மகன் பாச்சாவின் திருமண நாள். ஹேமமாலினி திருமண மண்டபத்தில் அன்று மாலை ரிஸப்ஷன். கலைஞரும், அவரது சக அமைச்சர் பெருமக்களும் சேர்ந்து வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றனர். கலைஞரின் நகைச்சுவை உணர்வுதான் ஊர் அறிந்த ஒன்றாயிற்றே மாப்பிள்ளையை வாழ்த்தியபோது பாச்சா இனிமேல் உன் பாச்சா பலிக்காது’ என்று கலைஞர் கூறியதை இன்றும் சாவி மறக்காமல் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து கொண்டிருக்கிறார். மணமக்களை வாழ்த்தியபின் சாவியிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டபோது தன்னை வாசல் வரை வந்து வழியனுப்பிய சாவியிடம், அப்ப, நீங்க இன்னிக்குப் பீச்சுக்கு வர மாட்டீங்க என்றார் கலைஞர். கலைஞர் கிளம்பிய பின்பு சாவியின் மனதில் ஒரு உறுத்தல். அப்ப இன்னிக்கு பீச்சுக்கு வரமாட்டீங்க என்று கலைஞர் தமாஷூக்குத்தான் சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தாலும் இன்று நாம் பீச்சுக்குப் போய் திடீரென அவரை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என ஒரு முடிவெடுத்தார் சாவி. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் - அதுவும் வி.ஐ.பிக்கள் பலர் வரிசையாக வந்து போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் - எந்தத் தந்தையும் அந்த இடத்தை 242

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/260&oldid=824691" இலிருந்து மீள்விக்கப்பட்டது