பக்கம்:சாவி-85.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் விட்டு வெளியே போவதை எண்ணியும் பார்க்க முடியாது. ஆனால் கலைஞர் மீது சாவி கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் நட்பும் அன்று அவரை ஏன் இப்படிப்பட்ட முக்கியமான சமயத்தில் தான் கொண்டிருக்கும் நட்பைக் கலைஞருக்கு வெளிப்படுத்தக் கூடாது?’ என்று தூண்டியிருக்க வேண்டும். உடனே மண்டபத்தில் உக்கிராண அறைக்குள் போய் சீர்முறுக்கு, லட்டு, அதிரசம் போன்ற கல்யாண பட்சணங்களை இரண்டு மூன்று பைகளில் நிரப்பிக் கொண்டார். யாரிடமும் எதுவும் சொல்லாமல் இதோ வருகிறேன் என்று மனைவியிடம் மட்டும் சொல்லிவிட்டுக் கார் ஏறி மெரீனா பிச்சை அடைந்தார். சாவியைக் கண்டதும் கலைஞர் ஆச்சரியத்துடன் ஏன் வந்தீர்கள்?’ என்று கேட்டார். சாவி சிரித்துக்கொண்டே தின்பண்டங்களை அனைவருக்கும் விநியோகித்து விட்டு அங்கேயே அமரப் போனார். சாவியை எல்லோரும் சேர்ந்து துரத்தாத குறையாக என்ன இது! இப்போது நீங்கள் வரவேற்பை விட்டுவிட்டு வரலாமா? முதலில் அங்கே போய்ச் சேருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். ஒருமுறை சாவி தினமணி கதிர் ஆசிரியர் குழுவினரை அழைத்துக் கொண்டு எடிட்டோரியல் டிஸ்கவுனுக்காக பெங்களூர் போயிருந்தார். சேஷாத்ரிபுரத்தில் ஒரு ஹோட்டலில் சாவியும் குழுவினரும் தங்கியிருந்தார்கள். கப்பன் பூங்கா புல் தரையில் அமர்ந்து பத்திரிகைக்கான விஷயங்கள் பற்றி நாள் முழுதும் விவாதித்தார்கள். அன்று மாலை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் கலைஞர் பேசுகிறார் என்பதைக் கேள்விப்பட்ட சாவி அந்தக் கூட்டத்துக்குப் போய் கலைஞரின் பேச்சைக் கேட்பது என்று முடிவு செய்தார். அன்று கலைஞர் அழகுத் தமிழில் மிக அருமையாகப் பேசி 243

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/261&oldid=824693" இலிருந்து மீள்விக்கப்பட்டது