பக்கம்:சாவி-85.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கூட்டத்தினரைச் சொக்க வைத்தார். கூட்டம் முடிந்து கலைஞர் மேடையைவிட்டு இறங்கி வாயில் நோக்கி நடந்து வந்தபோது சாவி அங்கே வந்திருப்பதைக் கவனித்து விட்டு எப்ப வந்தீங்க, என்று விசாரித்தார். மறுநாள் காலை கலைஞர் சென்னைக்குக் கிளம்புகிறார். அன்று அதிகாலை சாவி தங்கியிருந்த சேஷாத்ரிபுரம் ஹோட்டலுக்கு ஒரு கார் வந்து நிற்கிறது. கலைஞர் உங்களை அழைத்து வரச்சொல்லி கார் அனுப்பியிருக்கிறார். சென்னைக்கு அவர் கூடவே நீங்களும் காரில் போகிறீர்கள். நண்பர்களிடம் சொல்லிவிட்டுப் பயணமாக வந்து விடுங்கள்” என்கிறார் வந்தவர். பெங்களுரிலிருந்து ஆறு மணி நேரப் பயணம்! "அந்த ஆறு மணி நேரப் பயணம் கலைஞரின் நகைச் சுவை கலந்த பேச்சின் சுவாரசியத்தில் ஆறு நிமிடங்களாய்ப் பறந்து விட்டது எனக்கு ' என்று பூரித்துப் போகிறார் சாவி, கலைஞர் அவர்கள் பல விஷயங்கள் குறித்து சாவியிடம் பேசிக் கொண்டே வந்தபோது சாவி அதிகம் பேசவில்லை. முதலமைச்சருடன் பயணம் செய்கிறோம் என்கிற த்ரில் அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. “என்ன பேசாமலயே வர்றீங்க?' என்று கலைஞர் கேட்ட போது, 'ஒரு முதலமைச்சருடன் பயணம் செய்கிறோம் என்கிற அந்த த்ரில் லில் பேச்சு வரவில்லை" என்றார் சாவி. கிட்டத்தட்ட சித்துரை நெருங்கும் போது கலைஞர் அவர்களை சாவி ஒரு கேள்வி கேட்டார். 'உலகத்தின் மிகப் பெரிய அதிசயமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?" 'ரேடியோ எங்கேயோ ஒருவர் பேசுவதை அல்லது 244

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/262&oldid=824695" இலிருந்து மீள்விக்கப்பட்டது